Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“வடசென்னை வீரம் விளைந்த மண்.. சார்பட்டா பரம்பரைக்கு தேசிய விருது தந்திருக்கலாம்”: ஜெயக்குமார் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடசென்னை வீரம் விளைந்த மண். வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்திற்கு தேசிய விருது கொடுத்திருக்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுக ஆட்சியில் கஞ்சா, போதை வஸ்துகள் மக்களிடையே சர்வசாதாரணமாக புழங்கி வருகிறது. இதனை தடுக்க வேண்டிய காவல்துறை அடிவாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என முதல்வர் சொல்கிறார், ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை.

Our north chennai movie is deserved to get national award: says Jayakumar

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் அண்ணா பூங்காவிற்குச் சென்று ஓவியக் கண்காட்சியை பார்வையிடும் போது திமுகவை சேர்ந்தவர் ஒருவர் அவரை தரக்குறைவாக பேசி மாமுல் கேட்டுள்ளார். ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் கிண்டலாக 'உங்களுக்கு தேவையான மாமூலை நானே தந்துவிடுகிறேன்' எனக் கூறிள்ளார்.

அதிமுகவில் 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களோடு எழுச்சி மாநாட்டை நடத்தி முடித்துள்ளோம். இதனை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்கள் கோடநாடு விவகாரத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். மருது அழகுராஜ் மீது அதிமுக சார்பில் மான நஷ்ட வழக்கு தொடரப்படும். கொடநாடு கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். அதிமுகவின் வளர்ச்சியை ஜிரணிக்க முடியாதவர்கள் தற்போது வாந்தி எடுக்கிறார்கள்." என விமர்சித்தார்.

தொடர்ந்து, ஜெய்பீம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு தேசிய விருது எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படங்களுக்கு தேசிய விருது வழங்கப்படாதது குறித்து ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஜெயக்குமார் முன்னாள் குத்துச்சண்டை வீரர் என்பதால், வடசென்னை குத்துச்சண்டையை மையமாக கொண்ட சார்பட்டா பரம்பரை பற்றி ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களுக்கு தேசிய விருது கொடுத்திருக்கவேண்டும். ஏனென்றால் வடசென்னையின் பாரம்பரியமே குத்துச்சண்டை தான். வடசென்னை என்றால் வீரம் விளைந்த மண். யாரும் எங்களுடன் மோத முடியாது. இப்படியான ஒரு மண்ணில் ஒரு படம் எடுக்கிறார்கள் என்றால் அந்த படத்திற்கு தேசிய விருது கண்டிப்பாக கொடுத்திருக்கலாம்." எனத் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+