போச்சு.. ஒரே நாளில் வீட்டுக்கு கிளம்பும் அரசு ஊழியர்கள்! மொத்தமாக இத்தனை பேரா? என்ன காரணம் தெரியுமா?
சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 8,144 பேர் இன்று ஒரே நாளில் ஓய்வு பெறுகின்றனர். இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் இத்தனை பேர் ஓய்வு பெறுவது அதிக எண்ணிக்கையாக இருக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் மட்டும் 30 பேர் இன்று ஓய்வு பெறுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் காவல்துறையில் பணியாற்றும் 18 பேர் இன்று ஓய்வு பெறுகின்றனர்.
தமிழ்நாடு அரசின் கீழ் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகள் மற்றும் பணிகள் செய்வதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தலைமைச் செயலர் தொடங்கி, ஆபீஸ் அசிஸ்டன்ட் வரை பல்வேறு துறை ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். பணியில் சேர்ந்த நாளிலிருந்து கணக்கிடப்பட்டு அதே மாதத்தில் ஓய்வு பெறுவது வழக்கம் தற்போது தமிழக அரசின் துறைகளில் தற்போதைய நிலையில் 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 58-ல் இருந்து 60 ஆக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உயர்த்தப்பட்டது. அதன்படி தற்போது மாநில அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆகும். ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் தாங்கள் பணியில் சேர்ந்த மாதத்தின் அடிப்படையில் ஓய்வு பெற்று வருவார்கள். குறிப்பாக மே மாதங்களில் தான் அதிகம் பேர் ஓய்வு பெறுவார்கள்.
அதற்கு முக்கிய காரணம், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அந்த முழு ஆண்டு முடிவு பெறும்போது மே மாதங்களில் தான் ஓய்வு பெறுவார்கள். அந்த அடிப்படையில் மே மாதம் 31-ந் தேதி இன்றுடன், ஒரே நாளில் சுமார் 8 ஆயிரத்து 144 பேர் ஓய்வு பெறுகின்றனர். அதாவது மாநில அரசின் குரூப்-ஏ பணியிடங்களில் 424 பேரும், பி பணியிடங்களில் 4 ஆயிரத்து 399 பேரும், சி பணியிடங்களில் 2 ஆயிரத்து 185 பேரும், குரூப்-டி பணியிடங்களில் 1,136 பேரும் ஓய்வு பெறுகிறார்கள்.
கல்லூரி பேராசிரியர்களை பொறுத்தவரை ஏ பிரிவிலும், ஆசிரியர்களை பொறுத்தவரை பி பிரிவு ஊழியர்களாக இருப்பார்கள். இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஓய்வு பெறுவது இதுவே அதிக எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கை மொத்த அரசு ஊழியர்களில் 0.86 சதவீதம் ஆகும். சென்னை தலைமை செயலகத்தில் மட்டும் 30 பேர் வரை இன்று ஓய்வு பெறுகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதத்தில் 22 பேர் ஓய்வு பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் காவல்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் 18 பேர் ஓய்வு பெறுகின்றனர்.
ஏற்கனவே தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் அதிகமாக இருக்கும் நிலையில் ஏறக்குறைய சுமார் ஒரு சதவீதம் அரசு ஊழியர்கள் இன்று ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது. அரசு ஊழியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்கங்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 8000 அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறுவது குறிப்பாக தலைமைச் செயலகத்தில் மட்டும் 30 பேர் வரை ஓய்வு பெறும் நிலையில் காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கிறது.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications