மார்பிங் ஆபாச வீடியோவை வெளியிட்டது முன்னாள் நண்பர்.. கேரளா போலீசில் புகார் அளித்த நடிகை ஓவியா!
சென்னை: நடிகை ஓவியா பெயருடன் ஒரு அந்தரங்க வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் வீடியோ பரவி வருவதாக ஓவியா கொடுத்த புகாரின் பேரில் கேரளா போலீசார் நடவடிக்கை எடுத்து, எக்ஸ் தளத்தில் அந்த வீடியோக்களை நீக்கி உள்ளனர்.
நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ என ஒரு 17 விநாடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் இடம்பெற்ற பெண், தோளில் டாட்டூ போட்டிருந்தார். ஓவியாவும் தோளில் அதேபோன்று டாட்டூ போட்டிருந்ததால், அந்த வீடியோவில் இருப்பது ஓவியா தான் என நெட்டிசன்கள் பலரும் கூறி வந்தனர்.

அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று நடிகை ஓவியா மறுப்பு தெரிவிக்கவில்லை. சமூக வலைதளங்களில் தன்னை இழிவாக விமர்சித்தவர்களை கண்டு கொள்ளாமல் இருந்தார். இன்ஸ்டாகிராமில் தன்னிடம் அந்த வீடியோ குறித்து கமெண்ட் செய்த சிலருக்கு கேசுவலாக ரிப்ளை செய்து இருந்தார்.
இந்நிலையில், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மார்பிங் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளதாக காவல்துறையிடம் ஓவியா தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
எக்ஸ் மற்றும் ஆபாச இணையதளங்களில் இருந்து தனது பெயருடன் வலம் வரும் ஆபாச வீடியோக்களை நீக்க வேண்டும் என்று கூறி திருச்சூர் காவல் ஆணையருக்கு நடிகை ஓவியா இமெயில் மூலம் புகார் அளித்து உள்ளார். இதையடுத்து எக்ஸ் தளத்தில் இருந்து சில வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன.
தனது பெயரில் பரப்பப்பட்டு வரும் வீடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ஓவியா கேட்டுக்கொண்ட நிலையில், அந்த வீடியோக்களை நீக்க எக்ஸ் இணையதளத்திற்கு திருச்சூர் காவல் ஆணையர் இளங்கோ கடிதம் அனுப்பினார். அதன்படி தற்போது 3 ஆபாச வீடியோக்கள் எக்ஸ் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
தற்போது 3 வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில ஆபாச இணையதளங்களிலும் அந்த வீடியோக்கள் உள்ளன. அதையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது தொடர்பாக நடிகை ஓவியாவிடம் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளோம். வீடியோக்களை பதிவேற்றம் செய்தவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர் என கேரளா போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாரிக் என்ற நபரோடு தனக்கு தொடர்பு இருந்ததாகவும், அவருடைய நட்பை துண்டித்ததால், அவர் தான் சித்தரிக்கப்பட்ட ஆபாச வீடியோவை வெளியிட்டிருக்கலாம் என்றும், தாரிக்கிடம் மேலும் பல பெண்களின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பதாகவும் ஓவியா போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளீயாகியுள்ளது.












Click it and Unblock the Notifications