லாஜிக்கே இல்லை! லோக்சபா எண்ணிக்கையை உயர்த்தினால் தென் மாநிலங்களுக்கே பாதிப்பு.! கொந்தளித்த சிதம்பரம்
சென்னை: லோக்சபா எண்ணிக்கையைத் தொகுதி மறுசீரமைப்பு மூலம் 543இல் இருந்து 816ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே இந்த திட்டத்திற்குக் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது அதிக மக்கள் தொகையுள்ள மாநிலங்களுக்கும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை மேலும் தீவிரப்படுத்தும் என விமர்சித்தார்.
நமது நாட்டில் முக்கியமான முடிவுகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் எடுக்கப்படுவது அனைவருக்கும் தெரியும். நாடாளுமன்றத்தில் கீழ் அவையாகக் கருதப்படும் லோக்சபாவில் இப்போது எம்பிக்கள் எண்ணிக்கை 543ஆக உள்ளது. தொகுதி மறுசீரமைப்பு மூலம் இந்த நம்பரை 816ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

லோக்சபா இடங்கள்
இருப்பினும், லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை இப்படி 543ல் இருந்து 816ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவுக்குக் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான ப. சிதம்பரம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த உயர்வு லோக்சபாவை நிர்வகிக்கக் கடினமானதாக மாற்று என்றும், ஒவ்வொரு எம்.பி.க்கும் பேசுவதற்கான வாய்ப்புகளையும், நேரத்தையும் வெகுவாகக் குறைக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசுத் திட்டம்
தமிழ்நாடு, கேரளா சட்டசபைத் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வரும் சூழலில், இந்த பரபரப்பான சூழலில் ஏப்ரல் 16 முதல் 18 வரை நாடாளுமன்றக் கூட்டத் தொடரைக் கூட்டி தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டிருப்பதையும் சிதம்பரம் விமர்சித்தார். இந்த திட்டத்தை அனைவரும் எதிர்க்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23 அன்றும் மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 அன்றும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ள சூழலில், இந்த காலகட்டத்தில் நாடாளுமன்றத்தைக் கூட்டி நடத்தினால் அதில் அனைத்து எம்பிக்களும் கலந்து கொள்ள முடியாது என்றும் அவர் விளக்கினார்.
ப சிதம்பரம்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "மக்களவையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பி.க்களும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 28 எம்.பி.க்களும் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளனர். ஏப்ரல் 16 முதல் 18 வரையிலான நாட்களில் அவர்கள் தங்கள் தொகுதிகளின் தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு இருப்பார்கள். இந்த காலகட்டத்தில் முக்கியமான அரசியலமைப்புத் திருத்த மசோதாக்கள் விவாதித்து வாக்களிப்பிற்குக் கொண்டு வரப்பட்டால், இந்த 67 எம்பிக்களால் எப்படிப் பங்கேற்க முடியும்? திட்டமிட்டு அவர்களைப் புறக்கணிக்கவே சரியாக இந்த காலகட்டத்தில் இந்த மசோதாவை அவர்கள் கொண்டு வந்துள்ளனர் என நான் சந்தேகிக்கிறேன்" என்றார்
அவசரம் ஏன்
ஏப்ரல் 16ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தை இவ்வளவு அவசரமாகக் கூட்ட என்ன அவசியம்? சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பிறகு, ஏப்ரல் 29ஆம் தேதி ஏன் கூட்ட முடியாது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மசோதாக்களின் வரைவுகள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்பதால் அதில் என்ன இருக்கிறது என்பது குறித்து தன்னால் பேச முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், கேரளாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை, மசோதாக்களில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்து ஒரு புரிதலை வழங்குவதாக ப. சிதம்பரம் தெரிவித்தார்.
தென் மாநிலங்கள்
அவர் மேலும் கூறுகையில், "மக்களவையின் பலத்தை 543ல் இருந்து 816 ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவு பிற்போக்கானது. இது அதிக மக்கள் தொகையுள்ள மாநிலங்களுக்கும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை மேலும் தீவிரப்படுத்தும்.
மகளிர்க்கான மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையிலேயே சாதிக்க முடியும்.. 816 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சில நிமிடங்கள் மட்டுமே பேச வாய்ப்பு கிடைத்தால், அவரால் என்ன சொல்ல முடியும்? என்ன மாதிரியான ஆக்கப்பூர்வ விவாதத்தை நடத்த முடியும்" என அவர் கேள்வி எழுப்பினார்.
-
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications