சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெண்ணும் பெண்ணும் லவ் பண்ண கூடாதா?.. நட்சத்திரம் நகர்கிறது.. LGBTQ+ அரசியலை வலுவாக பேசும் பா.ரஞ்சித்

Google Oneindia Tamil News

சென்னை: இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி உள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தின் டிரெய்லர் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.

Recommended Video

    LGBTQ-னா என்ன தெரியுமா? அவங்களுக்கு ஆதரவு கொடுப்பீங்களா ? *VOX

    "ஏன் பொண்ணும் பொண்ணும்.. பையனும் பையனும் லவ் பண்ண கூடாதா? அதை பற்றி பேசலாம்!" இப்படி வலுவான வரிகளுடன் வெளியாகி இருக்கிறது நட்சத்திரம் நகர்கிறது படத்தின் டிரெய்லர். இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கி இருக்கும் இந்த படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாக உள்ளது.

    தமிழ் சினிமாவில் தலித் அரசியலை கமர்ஷியல் ரீதியாக சொல்லி புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியவர் இயக்குனர் பா. ரஞ்சித். அதற்கு முன் ஜாதியத்திற்கு எதிராக ஒரு சில படங்கள் வந்து இருந்தாலும் அந்த சினிமா முறையை ஒரு அரசியல் நகர்வாகவே உருவாக்கியவர் இயக்குனர் பா. ரஞ்சித்தான்.

    அவரை தொடர்ந்தே மற்ற பல இயக்குனர்களும் தலித் அரசியலை மையமாக வைத்து படம் எடுக்க தொடங்கினார்கள்.

    அன்று பா. ரஞ்சித் சொன்னது! எஞ்சாயி எஞ்சாமி சர்ச்சை! அறிவு ஓரம்கட்டப்பட்டாரா? உண்மையில் நடந்தது என்ன? அன்று பா. ரஞ்சித் சொன்னது! எஞ்சாயி எஞ்சாமி சர்ச்சை! அறிவு ஓரம்கட்டப்பட்டாரா? உண்மையில் நடந்தது என்ன?

    பா. ரஞ்சித்

    பா. ரஞ்சித்

    அட்டகத்தி படத்தில் வடசென்னை மக்களின் வாழ்க்கை முறையை மென்மையாக காட்டிய ரஞ்சித் அதன்பின் மெட்ராஸ், காலா, கபாலியில் தலித் அரசியலை மிக வெளிப்படையாக பேசி இருந்தார். கோலிவுட்டில் அதுவரை பேச தயங்கிய விஷயங்களை பா. ரஞ்சித்தான் வெளிப்படையாக உடைத்து பேசினார். காலா படத்தில் முதல் ஷாட்டிலேயே ரஜினி "போல்ட்" ஆவது போல காட்டி.. ஹீரோயிசங்களை சூப்பர் ஸ்டாரை வைத்தே கேள்வி எழுப்பியவர் பா.ரஞ்சித்.

    சர்பேட்டா பரம்பரை

    சர்பேட்டா பரம்பரை

    எல்லாரும் தமிழ் தமிழ்ன்னு பேசுவானுங்க.. ஆனா மேலே போயிட்டா ஜாதியை தூக்கி வச்சுப்பானுங்க என்று அரசியல் நெடியோடு வைத்த வசனங்களும் சரி.. காட்சிகளும் சரி.. பா. ரஞ்சித் ஒரு அரசியல் இயக்குனர் என்பதை பல முறை நிரூபித்து இருக்கிறது. இயக்குனர் வெற்றிமாறன் கூட.. பா. ரஞ்சித் வெறும் இயக்குனர் அல்ல.. அவர் ஒரு அரசியல்வாதி.. ஒரு படம் எடுக்க கூடிய அரசியல்வாதி என்று நேரடியாக குறிப்பிடும் அளவிற்கு பா. ரஞ்சித் படங்கள் அரசியல் பேசும்!

    எல்ஜிபிடிகியூ ++

    எல்ஜிபிடிகியூ ++

    தற்போது அதேபோல் பா. ரஞ்சித் தமிழ் சினிமா இதுவரை தொடாத விஷயம் ஒன்றை தொட்டுள்ளார். எல்ஜிபிடிகியூ ++ பற்றி இதுவரை தமிழ் சினிமா பெரிதாக பேசியதே இல்லை. அதாவது தன் பாலின ஈர்ப்பாளர்கள், திருநங்கைகள், திருநம்பிகள், க்யூயர் பிரிவினர் போன்றவர்களை பற்றி தமிழ் சினிமா பெரிதாக பேசியதே இல்லை. அப்படியே பேசினாலும் அவர்களை கிண்டல் செய்வதாகவும், தவறாகவே நடந்து கொள்வதாகவுமே தமிழ் சினிமா காட்டி இருக்கிறது.

    கோவா

    கோவா

    கோவா படத்தில் மட்டுமே நடிகர் சம்பத்தை தன் பாலின ஈர்ப்பாளராக இயக்குனர் வெங்கட் பிரபு காட்டி இருப்பார். அதை தவிர்த்து பெரிதாக இந்த விஷயத்தை தொட்டு பேசிய இயக்குனர்கள் இல்லை. பாலிவுட்டில் எல்ஜிபிடிகியூ ++ பற்றிய காட்சிகள் கொஞ்சம் சகஜம் ஆகி உள்ளன. நெட்பிளிக்ஸ், அமேசான் காரணமாக உலகம் முழுக்க மற்ற மொழிகளில் எல்ஜிபிடிகியூ ++ கையாளப்படும் விதமும் மக்களுக்கு பரிட்சயம் ஆகி உள்ளது. இந்த நிலையில் தமிழில் எல்ஜிபிடிகியூ ++ பற்றியும் முதல்முறையாக ஒரு படம் வருகிறது.

    காதல்

    காதல்

    நட்சத்திரம் நகர்கிறது படத்தின் முதல் போஸ்டர் தொடங்கி அனைத்திலும் எல்ஜிபிடிகியூ ++ அடையாளங்கள் இருந்தன. வானவில் கலரில் போஸ்டர் தொடங்கி இப்போது வந்திருக்கும் டிரெய்லர் வரை. ஆண் - ஆண் காதல், ஆண் - பெண் காதல், பெண் - பெண் காதல், பல பாலின காதல் என்று அனைத்து விதமான காதலையும் பேசும் படம் என்பது டிரெய்லர் மூலம் தெளிவாகி உள்ளது. சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே இந்த படத்தின் டிரெய்லர் கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. தலித் அரசியல் மூலம் கோலிவுட்டின் அடையாளத்தை மாற்றிய பா. ரஞ்சித் இந்த நட்சத்திரம் நகர்கிறது மூலம் தமிழ் சினிமாவின் புதிய கதவுகளை திறந்துவிடுவார் என்று நம்பலாம்!

    English summary
    Director P Ranjit's Natchathiram Nagarkirathu to talk about LGBTQ+ love in Kollywood. யக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி உள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தின் டிரெய்லர் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X