குஷ்பூ வழக்கில் என்னாச்சு? பழைய தீர்ப்புகளை சுட்டிக்காட்டி ‘லா’ பாயிண்டுகளை அடுக்கிய பி.வில்சன்!
சென்னை: சனாதனத்துக்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பான வழக்கில் உதயநிதிக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பூ வழக்கு, எழுத்தாளர் பெருமாள் முருகன் வழக்கு ஆகியவற்றில் நீதிமன்ற உத்தரவுகளைச் சுட்டிக்காட்டி வாதாடினார்.
சனாதனத்துக்கு எதிராகப் பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு தி.மு.க எம்.பி ஆ.ராசா ஆகியோரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில இந்து முன்னணி நிர்வாகிகள் கோ வாரண்டோ வழக்குகளை தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார்.

நாத்திகம் பேசவும் உரிமை உண்டு: அமைச்சர் பதவி பிரமாண உறுதிமொழியை மீறி விட்டனர் என்று கூறி உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாது, ஒருவரை அமைச்சராக நியமிப்பதும், நீக்குவதும் முதலமைச்சரின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் குறிப்பிட்டார். அமைச்சர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசினாலும், அதை எதிர்த்து தனி நபர்கள் வழக்கு தொடர முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாகவும், அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 25, மத நம்பிக்கையை மட்டும் பாதுகாக்கவில்லை, நாத்திக கொள்கைகளையும் பாதுகாக்கிறது. ஏன் நாத்திகத்தை ஏற்கிறோம் என்பது குறித்து கருத்து தெரிவிக்கவும் உரிமை வழங்குகிறது என்றும் வாதிட்டார்.
அதனால், சனாதனத்துக்கு எதிராகப் பேசியதாக இந்த வழக்கை தொடர முடியாது, பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் அதேவேளையில், மாற்றுக் கருத்து உள்ளவர்களின் கருத்துரிமையையும் பாதுகாப்பது முக்கியம். அந்த கருத்துரிமையை பாதுகாப்பது உயர்நீதிமன்றத்தின் கடமை ஆகும் என்றும் சுட்டிக்காட்டினார். சனாதனத்தில் மக்களிடையே ஏற்றத்தாழ்வு, தீண்டாமை உள்ளது. அவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளார் என்றும் வழக்கறிஞர் பி.வில்சன் தெரிவித்தார்.

குஷ்பு வழக்கில் கோர்ட் சொன்னது: மேலும், திருமணத்துக்கு முன்பு உறவு குறித்து நடிகை குஷ்பூ தெரிவித்த கருத்துகளுக்காக அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இதை எதிர்த்து குஷ்பூ தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர் தெரிவித்த கருத்து பிடிக்கவில்லை என்றால், அவரது கருத்து தவறு என்று பொதுவெளியில் பேசலாமே, அதற்காக குற்ற வழக்கு ஏன் தொடர வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் வாதிட்டார் வழக்கறிஞர் வில்சன்.
பேச்சுரிமை என்பது ஒருவரின் அடிப்படைய மனித உரிமை. ஒருவரது பேச்சுரிமையை கட்டுப்படுத்த அரசியல் அமைப்புச் சட்டத்தில் 8 காரணங்கள் கூறப்பட்டுள்ளன. அந்த 8 காரணங்களில், மனுதாரர் இந்த வழக்கில் கூறியுள்ள காரணம் இடம்பெறவில்லை. தேவை இல்லாமல் இந்த வழக்கை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்தது மட்டுமல்லாமல், அமைச்சரையும் பதில் மனு தாக்கல் செய்ய வைத்துள்ளனர் என்றார்.
பெருமாள் முருகன் வழக்கில்: மாதொருபாகன் என்ற புத்தகத்தை எழுதிய பெருமாள் முருகன் வழக்கில், ஒருவரது கருத்துரிமையை பாதுகாக்க வேண்டும். அந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் பிடிக்கவில்லை என்றால், அந்த புத்தகத்தை வாங்க வேண்டாம்... படிக்க வேண்டாம் எனவும், ஒருவரது பேச்சு பிடிக்கவில்லை என்றால் அவரது கருத்துரிமையை தடுக்க முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக வாதிட்டார் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்.

அதையே இந்த வழக்கிலும் சுட்டிக்காட்டிய மூத்த வழக்கறிஞர் வில்சன், சனாதன ஒழிப்பு மாநாடு ஒரு கூட்டரங்கில் காலை முதல் இரவு வரை நடந்துள்ளது. ஏராளமான அறிஞர்கள் பேசியுள்ளனர். அந்த கருத்து பிடிக்கவில்லை என்றால் அதை ஏன் கேட்க வேண்டும்? இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி, இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என கூறி கொண்டு, கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால், உள்நோக்கத்துடன் சேகர்பாபுவுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications