சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தங்களுக்கே எதிராக மாறியதால், அபிநந்தன் வீடியோக்களை அவசரமாக அகற்றிய பாகிஸ்தான்

Google Oneindia Tamil News

Recommended Video

    பாகிஸ்தானுக்கே எதிராக மாறியதால், அபிநந்தன் வீடியோக்கள் அகற்றம்

    சென்னை: கடைசி நேரத்தில் அபிநந்தனை மிரட்டி பதிவு செய்த வீடியோக்களை பாகிஸ்தான் அரசு தனது சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து நீக்கிவிட்டது.

    பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட, இந்திய விங் கமாண்டர் அபிநந்தன், நேற்று இந்தியாவிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டார். அவர் ஒப்படைக்கப்படும் முன்பாக, பாகிஸ்தான் ராணுவத்தை புகழ்ந்து பேசுமாறு, வலியுறுத்தப்பட்டுள்ளார். அதேபோல இந்திய மீடியாக்களை கடுமையாக விமர்சனம் செய்யவும் கூறியுள்ளனர். இதற்கு அபிநந்தன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    Pakistan government deletes propaganda video on Abhinandan

    இதையடுத்து பல்வேறு கட், எடிட் ஆகியவற்றுடன் அவரது பேச்சை தயாரித்த பாகிஸ்தான் ராணுவம், அதை மீடியாக்களிடம் கொடுத்தது. அபிநந்தனை காலதாமதமாக இந்தியாவிடம் நேற்று இரவுதான் ஒப்படைத்தது பாகிஸ்தான். அதற்குள்ளாக, அந்த வீடியோக்கள் பாகிஸ்தான் மீடியாக்கள் மற்றும், அந்த நாட்டு அரசு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பப்பட்டது.

    ஆனால், இது மிக கடுமையாக எடிட் செய்யப்பட்டது என்பது சிறு குழந்தைகளும் பார்த்தால் தெரிந்துவிடும் அளவுக்கு இருந்தது. அபிநந்தன் வற்புறுத்தி இவ்வாறு கூற வைக்கப்பட்டுள்ளார் என்பதை யார் வேண்டுமானாலும் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் இருந்தது.

    புத்தியை காட்டிய பாக்.. அபிநந்தனுக்கு கடைசி நேரத்தில் நடந்த கொடுமை.. இந்திய வருகை தாமதமான பின்னணி புத்தியை காட்டிய பாக்.. அபிநந்தனுக்கு கடைசி நேரத்தில் நடந்த கொடுமை.. இந்திய வருகை தாமதமான பின்னணி

    போர்க் கைதியை இதுபோல வற்புறுத்துவது ஜெனிவா ஒப்பந்தத்திற்கு எதிரானது. நல்ல பிள்ளையை போல விடுதலை செய்வதாக அறிவித்துவிட்டு, இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டதால், பாகிஸ்தானின் நல்ல பிள்ளை வேஷம் கலைந்துவிட்டது என இந்திய மீடியாக்கள் செய்தி ஒளிபரப்பின. உலக அளவிலும் இது கவனத்தை ஈர்த்தது.

    தாங்கள் செய்த தவறு அம்பலமாகிவிட்டதால் உடனடியாக அந்த வீடியோக்களை சமூக வலைத்தங்களில் இருந்து பாகிஸ்தான் அகற்றிவிட்டது. அங்குள்ள மூத்த பத்திரிக்கையாளர்களும் அகற்றிவிட்டனர்.

    English summary
    Soon after releasing a propaganda video featuring Abhinandan Varthaman with multiple edits, Pakistan took down the video from its official Twitter handle.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X