யார் இந்த ஜோதிடர் கனிமொழி? அதிமுக மாவட்ட செயலாளரையே காலி செய்த தவெக வேட்பாளர்!கோவையில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டத்தின் மிகப்பெரிய தொகுதியான கவுண்டம்பாளையத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் கனிமொழி சந்தோஷ் யாரும் எதிர்பார்க்காத ஒரு பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளார். கடந்த 3 தேர்தல்களாக அதிமுகவின் எஃகு கோட்டையாகத் திகழ்ந்த இந்தத் தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ-வும், அதிமுகவின் கோவை வடக்கு மாவட்டச் செயலாளருமான பி.ஆர்.ஜி. அருண்குமாரையே 42,140 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கனிமொழி சாதனை படைத்துள்ளார்.

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கனிமொழி சந்தோஷ்.. இளங்கலை சட்டப்படிப்பு முடித்தவர் மட்டுமின்றி ஜோதிடத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்..

Astrologer Kanimozhi

யார் இந்த கனிமொழி சந்தோஷ்?

டைல்ஸ் மற்றும் கிரானைட் தொழில், பிசியோதெரபிஸ்ட், வாஸ்து நிபுணர் எனப் பன்முக அடையாளங்களைக் கொண்ட இவருக்கு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ்கள் உள்ள நிலையில், ஜோதிடம் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்தலாம் என இவர் பேசிய பழைய வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

37 வயதான கனிமொழி சந்தோஷ், வழக்கறிஞர், பிசியோதெரபிஸ்ட் மற்றும் தொழிலதிபர் எனப் பன்முக அடையாளங்களைக் கொண்டவர்.

கனிமொழி சந்தோஷ் வெற்றி

அதேபோல் அவர் ஒரு ஜோதிடராகவும் அறியப்படுகிறார். இருந்தாலும் இந்தத் தேர்தலில் அவரின் தனிப்பட்ட அடையாளங்களைக் கடந்து, தவெக முன்வைத்த அரசியல் மாற்றத்திற்கு மக்கள் மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளனர்.

இவருக்கு கவுண்டம்பளையத்தில் விஜய் சீட் தந்திருந்தார்.. மொத்தம் பதிவான வாக்குகளில் 1,46,466 வாக்குகளை அள்ளிய கனிமொழி சந்தோஷ், தனது முதல் தேர்தலிலேயே சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார்.

கவுண்டம்பாளையம் தேர்தல் முடிவுகள் 2026

இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார் 1,04,326 வாக்குகளைப் பெற்று 2ம் இடத்தையும், காங்கிரஸ் வேட்பாளர் சூர்யபிரகாஷ் 90,726 வாக்குகளைப் பெற்று 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

கவுண்டம்பாளையம் தொகுதியைப் பொறுத்தவரை, இது காலங்காலமாக அதிமுகவின் பலமான தளமாகக் கருதப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு தொகுதியில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான மாவட்டச் செயலாளரே முதல்முறையாகத் தோல்வியை தழுவியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 4.22 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில், ஒரு புதிய கட்சி இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றிருப்பது, கோவையின் அரசியல் சமன்பாடுகளை மொத்தமாக மாற்றியமைத்துள்ளது.

தவெக கனிமொழி சந்தோஷ்

இந்தத் தேர்தல் முடிவு என்பது வெறும் ஒரு வேட்பாளரின் வெற்றி மட்டுமல்ல; பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆதரித்து வந்த தொகுதியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மனமாற்றம் என்றே சொல்லலாம்..

அதிமுகவின் பலமான வாக்கு வங்கியை சரித்து, ஒரு புதிய வரவை மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பது ஆச்சரியமானது. குறிப்பாக, கனிமொழி சந்தோஷ் மீது கடந்த காலங்களில் சில ஜோதிட ரீதியான சர்ச்சைகள் வைக்கப்பட்டாலும், மக்கள் அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல், மாற்றத்தை நோக்கி வாக்களித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.

அதிமுக கோட்டை சரிவு

அரசியல் களத்தில் ஒரு வேட்பாளர் மீதான விமர்சனங்களை விட, அவர் எந்த மாதிரியான புதிய நம்பிக்கையைத் தருகிறார் என்பதையே மக்கள் கவனிக்கிறார்கள் என்பதற்கு கவுண்டம்பாளையம் ரிசல்ட் ஒரு பாடமாக அமைந்துள்ளது.

கனிமொழி நம்பிக்கை

கவுண்டம்பாளையத்தில் வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி சந்தோஷ், "கோவை மக்கள் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்; அந்த மாற்றத்திற்காகவே எங்களின் தளபதி விஜய்யை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். என்னை வெற்றிபெறச் செய்த தொகுதி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் அடிப்படை வசதிகள் மட்டுமின்றி, தங்களின் நீண்டகாலத் தேவைகளையும் கோரிக்கைகளாக முன்வைத்தனர்; அவற்றை நிச்சயம் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றுவேன். குறிப்பாக, பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கு எனது பணிகளில் அதிக முக்கியத்துவம் அளிப்பேன்," என்று உறுதிபடத் தெரிவித்தார்.

மொத்தத்தில், 1.46 லட்சம் வாக்குகள் என்பது ஒரு புதிய கட்சிக்கு சாதாரணமான விஷயம் அல்ல. சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள கனிமொழி சந்தோஷ், இனிவரும் காலங்களில் தனது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கும் மக்கள் நலப் பணிகளுக்கும் இடையே ஒரு தெளிவான இடைவெளியைப் பராமரிக்க வேண்டும். தொகுதி மக்களின் இந்த மிகப்பெரிய ஆதரவை அவர் எப்படிச் செயல்வடிவமாக மாற்றப்போகிறார் என்பதைப் பொறுத்தே தவெக-வின் எதிர்கால வளர்ச்சி கோவை மண்டலத்தில் அமையும்... பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+