தமிழ்நாடு எதிர்பாராத டிவிஸ்ட்.. புதிய கட்சி தொடங்கும் பண்ருட்டி ராமச்சந்திரன்.. பெயர் தெரியுமா
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகள் பரபரப்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எம்ஜிஆர் கால சீனியரான பண்ருட்டி ராமச்சந்திரன் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக உரிமை மீட்புக் கழகத்தில் இருந்து வெளியேறி, நாளை மறுநாள் புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் கட்சி பெயரை கேட்டு திமுக, அதிமுக 2 கட்சிகளும் ஆடிப்போயுள்ளன [Panruti Ramachandran New Party].
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. 4 முனை போட்டியால் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் சொதப்பல்
தமிழ்நாட்டில் தேமுதிக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதிய தமிழகம் உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ளனர். பொதுவாக தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் கட்சி மாறுவதும், புதிய கட்சிகள் முளைப்பதும் வழக்கமானது. வருகிற தேர்தலை முன்னிட்டும் பல புதிய கட்சிகள் வந்துள்ளன.
நடிகர் விஜய்யின் தவெக தொடங்கி மதிமுகவில் இருந்து விலகிய மல்லை சத்யாவின் திவெக வரை பல கட்சிகள் தேர்தலில் மல்லுகட்டு வருகிறார்கள். ஓ. பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு முக்கிய முடிவு எடுப்பார் என அவரின் ஆதரவாளர்கள் காத்திருந்தனர். ஆனால் அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை.
பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சி
இதனால் அவரின் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து வெளியேறி அதிமுக, திமுக, தவெக கட்சிகளில் ஐக்கியமாகி வருகிறார்கள். எம்ஜிஆர் காலத்து அரசியல் ஜாம்பவானான பண்ருட்டி ராமச்சந்திரன் பிறகு தேமுதிகவில் அங்கம் வகித்தார். தற்போது அவர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக உரிமை மீட்பு குழுவின் ஆலோசகராக உள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அவரும் ஓபிஎஸ் மீதான அதிருப்தியில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் என கூறப்பட்டது. அவர் விஜய்யின் தவெகவில் இணைய போகிறார் என்றும் புதிய கட்சி தொடங்க போகிறார் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் புதிய கட்சி தொடங்குவது உறுதியாகிவிட்டது.
கட்சி பெயர் இதுதான்
எம்ஜிஆர் அண்ணா திமுக என்கிற கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சென்னையில் நாளை மறுநாள் (பிப்ரவரி 19) வெளியிடவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் அணியில் உள்ள சில நிர்வாகிகள் அவரின் கட்சியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. அவர் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications