பரந்தூர் பாய்ச்சல்.. கிரீன் சிக்னல் தந்த டெல்லி.. விமான நிலையம் வருவது உறுதியானது! தமிழக அரசு வேகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரந்தூரில் உள்ள சென்னையின் இரண்டாவது கிரீன்ஃபீல்ட் விமான நிலையத் திட்டத்துக்கு மத்திய அரசு இறுதிக் கொள்கை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் விரைவில் அங்கே நிலம் கையகப்படுத்தும் திட்டங்கள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மிகவும் முக்கியமான சர்வதேச விமான நிலையம் ஆகும். இங்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். அவ்வப்போது இங்கே கண்ணாடி உடைந்து விழும் சம்பவம் நடக்கும். ஆனாலும் சென்னை விமான நிலையம் பாதுகாப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும்.

paranthur airport

பரந்தூர் புதிய விமான நிலையம்

2017-18ம் ஆண்டில் மட்டும் சென்னை விமான நிலையத்தின் மூலம் சென்னை விமான நிலையத்தை 20.26 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். அமெரிக்கா, சீனா, ஜப்பான் என்று உலகம் முழுக்க பல நாடுகளுக்கு இங்கிருந்து விமானம் செல்கிறது.

ஏன் புதிய விமான நிலையம்: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது. ஆனால் இன்னும் 10 வருடங்களில் தற்போது சென்னை விமான நிலையம் இருக்கும் பகுதி அதிக நெரிசல் மிகுந்த பகுதியாக மாறும். இதனால் மக்கள் அதிக அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். அதேபோல் தற்போது மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அதிக அளவில் விமானங்கள் வந்து செல்கிறது. இதனால் விமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

இதை சமாளிக்கும் வகையில் சென்னைக்கு கொஞ்சம் வெளியே விமான நிலையம் அமைக்க நிலம் தேடி வந்தனர். அதன்படி காஞ்சிபுரம் - அரக்கோணம் அருகே இருக்கும் பரந்தூர், மாண்டூர் ஆகிய இடங்கள் ஆலோசிக்கப்பட்டது. கடைசியில் தற்போது விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மீனம்பாக்கத்தில் இருந்து இந்த பரந்தூர் 70 கிமீ தொலையில் இருக்கிறது. மொத்தம் இந்த விமான நிலையம் 3800 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக முதலில் திட்டமிடப்பட்டது. தமிழக அரசு சார்பாக இந்த நிலம் வழங்கப்படுகிறது.

மிக முக்கிய ஒப்புதல்

பரந்தூரில் உள்ள சென்னையின் இரண்டாவது கிரீன்ஃபீல்ட் விமான நிலையத் திட்டத்துக்கு மத்திய அரசு இறுதிக் கொள்கை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் விரைவில் அங்கே நிலம் கையகப்படுத்தும் திட்டங்கள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மெட்ரோ பணிகள்

52.94-கிமீ பூந்தமல்லி-பரந்தூர் மெட்ரோ நீட்டிப்புக்கான டிபிஆரை CMRL சமர்ப்பித்து உள்ளது. 52.94 கிமீ தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.

சென்னையின் மேற்கு புறநகர்ப் பகுதிகளை பரந்தூர் விமான நிலையத்துடன் இணைக்கும் வகையில் இந்த மெட்ரோ அமைக்கப்பட உள்ளது. இந்த மெட்ரோ நெரிசலைக் குறைக்கும் மற்றும் பயண நேரத்தைக் குறைக்கும். இது குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் இணைக்கப்படும் வகையில் திறக்கப்பட உள்ளது.

பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் இணைப்புக்கான திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.,43.63 கி.மீ.தொலைவுக்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு, நான்கு நிறுவனங்கள் ஏலம் சமர்ப்பித்துள்ளன.

ஒரு வருடத்தில் திட்டம் தயாராகிவிடும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். டிபிஆரில் மெட்ரோவின் சரியான நீளம், நிலையங்களின் எண்ணிக்கை, நடைபாதையின் வகை (நிலத்தடி/உயர்த்தப்பட்ட/அட்-கிரேடு), ரயிலின் வகை மற்றும் மொத்த செலவு போன்ற விவரங்கள் இருக்கும்.

அதன்பின் இதற்கான அனுமதி பெறப்பட்டு பணிகள் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை மக்களின் துரித போக்குவரத்திற்கான மெட்ரோ பயண சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இதை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிவிடம் சென்னை மெட்ரோ நிர்வாகம் சமர்ப்பித்து உள்ளது.

இதன் ஒரு கட்டமாக பரந்தூரில் மொத்தம் 2 மெட்ரோ நிலையங்கள் வர உள்ளன. உள்ளூர் விமான நிலைய பகுதிக்கு அருகே ஒரு ஸ்டேஷன், சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ஒரு ஸ்டேஷன் என்று இரண்டு ஸ்டேஷன்கள் வர உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+