ஏர்போர்ட் கட்டத்தானே நிலம் கொடுத்தோம்.. என்ன கொடுமை இது.. விஜய்க்கு எதிராக திரளும் பரந்தூர் மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அருகே பரந்தூரில் ரூ.27,400 கோடி மதிப்பில் உலகத் தரத்திலான பசுமை விமான நிலையம் (Greenfield Airport) அமைக்கும் திட்டம் தற்போது சிக்கலில் மாட்டி உள்ளது. நிலம் கொடுத்த விவசாயிகளும் உள்ளூர் மக்களும் தங்கள் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் பெரும் தவிப்பில் உள்ளனர். புதிதாக ஆட்சிக்கு வந்த விஜய் தலைமையிலான அரசு இந்தத் திட்டத்தை கைவிடும் என்கிற தகவல்கள் பரவி வரும் நிலையில், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட 1,700 ஏக்கர் நிலத்தில் SIPCOT தொழிற்பூங்கா அமைக்கும் யோசனை முன்னுக்கு வருவதாக வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2022-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு 2025 ஏப்ரலில் இறுதி ஒப்புதல் கிடைத்தது. அதன்பின் வேகமாக நிலம் கையகப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நாகப்பட்டு, நெல்வாய், குணகரம்பாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து சுமார் 1,700 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், தேர்தல் பிறகு பணிகள் முழுவதும் மந்த நிலையில் உள்ளன. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

Parandur Airport

நாகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.. தனது விளைநிலத்தை திட்டத்திற்காக கொடுத்தவர். "மாநில வளர்ச்சிக்காகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதாலும் மனமில்லாமல் நிலத்தை விட்டுக்கொடுத்தேன். இழப்பீடும் கிடைத்தது. ஆனால் இத்தனை மாதங்கள் ஆகியும் ஒரு வேலையும் நடக்கவில்லை. எங்களின் எதிர்காலம் என்னவென்றே தெரியவில்லை," என்கிறார் வருத்தத்துடன்.
மற்றொரு விவசாயி சிவப்பிரகாசம் (நெல்வாய்) தனது 5 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளார். அரசு சிறுவள்ளூரை மாற்று இடமாக அறிவித்தாலும், காரை கிராமத்தை ஒதுக்குமாறு கோரிக்கை வைக்கிறார். "காரை பகுதியில் போக்குவரத்து வசதி அதிகம். வேலைவாய்ப்பும் எளிது. மேலும், வாழ்வாதாரம் சீரடையும் வரை மாதந்தோறும் நிதியுதவி வழங்க வேண்டும்," என்கிறார்.

கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட முடங்கியுள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நாகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இன்னொருவர், "சாக்கடை கசிவு, தெருவிளக்கு பழுது என்று புகார் கொடுத்தாலும் அதிகாரிகள் வருவதில்லை. 'நீங்கள் எப்படியும் இடம் மாறப்போகிறீர்கள்' என்கிறார்கள். இது எங்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்குகிறது," என்கிறார்.

இடமாற்றக் குழப்பம் காரணமாக பலரின் தனிப்பட்ட திட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சங்கீதா என்ற பெண், "புதிய வீடு கட்ட திட்டமிட்டோம். ஆனால் கட்டிட அனுமதி கிடைக்கவில்லை. எல்லாம் நிச்சயமின்மை காரணமாகத் தான்," என்கிறார்.

இன்னொரு விவசாயி "வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும்," என வலியுறுத்துகிறார்.
முருகன் மேலும் கூறுகையில், "விமான நிலையம் என்று சொல்லி நிலம் வாங்கி, பின்னர் SIPCOT-ஆக்கினால் தீவிரமாக எதிர்ப்போம். அப்படி செய்யக் கூடாது," என எச்சரிக்கிறார்.

எனினும், சிலர் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளனர். பெங்களூருவில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பெண் ஒருவர், "பெங்களூரு போல இங்கும் வளர்ச்சி வர வேண்டும். கூடுதல் இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு உத்தரவாதம் தேவை," என்கிறார்.

பரந்தூர் பகுதி மக்கள் அனைவரும் ஒரே குரலில், "அரசு உடனடியாக தெளிவான அறிவிப்பை வெளியிட்டு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என வலியுறுத்துகின்றனர். விமான நிலையத் திட்டம் தொடருமா அல்லது SIPCOT-ஆக மாறுமா என்பதை அரசு விரைவில் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இல்லையெனில், பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டம் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+