Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பரந்தூர் ஏர்போர்ட் பத்திரப்பதிவு.. நிலம் தந்தவர்கள் யார்.. போராட்டக்குழு சொன்ன முக்கியமான விஷயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரந்தூர் பசுமை விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்ட குழு தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் கதிரேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், எந்தவிதமான பூச்சாண்டி காட்டினாலும் பரந்தூர் பகுதி விவசாய மக்கள் ஒரு பிடி நிலத்தையும் கொடுக்க மாட்டார்கள். இதனை நன்கு உணர்ந்த மாவட்ட நிர்வாகம், பரந்தூர் பகுதியில் நிலத்தில் முதலீடு செய்துள்ள வெளியூர் நபர்களை வாகனம் மற்றும் உணவு ஏற்பாடு செய்து அழைத்து வந்து வலுக்கட்டாயமாக அவர்களது நிலங்களை பத்திரப்பதிவு செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்கள்.

காஞ்புரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் இடையே பரந்தூரை சுற்றியுள்ள சுற்றியுள்ள 19 கிராமங்களில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலத்தை மாநில அரசு தேர்வு செய்த நிலையில்,மத்திய அரசும் ஒப்புதல் அளித்துவிட்டது. ஆனால் இந்த நிலம் விவசாய நிலம் அதிக அளவில் உள்ளதாகவும், இங்கு அமைத்தால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்று கூறி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை 1,100 நாட்களுக்கு மேலாக நடத்தி வருகிறார்கள்

Paranthur Airport deed

நிலம் கையகப்படுத்துதல்

ஆனால் கிராம மக்களின் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ஏற்க மறுத்துவிட்டன. எந்த திட்டம் கொண்டுவந்தாலும் யாருக்காவது பாதிப்பு வரும் என்றாலும், மக்களுக்கு பெரிய பாதிப்பு வராத வகையில் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அறிவித்தன. அதன்படியே விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த பல்வேறு கட்டப்பணிகளை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த திட்டத்துக்கு தேவையான நிலங்களை தேர்வு செய்து கையகப்படுத்தும் பணியை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் வருவாய்த்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் இறங்கி உள்ளனர்.

நிலம் வழிகாட்டி மதிப்பு உயர்வு

அதேபோல் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்படும் நில உரிமையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று விமான நிலைய திட்டத்துக்கு கையகப்படுத்தப்படும் 3,331.25 ஏக்கர் நிலங்களுக்கு நில மதிப்பை உயர்த்தி ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.2 கோடியே 57 லட்சம் வரை நில மதிப்பு நிர்ணயம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது.


பத்திரப்பதிவு தொடக்கம்

இதையடுத்து பரந்தூர், பொடவூர், நெல்வாய், வளத்தூர் மற்றும் அக்கமாபுரம் என 5 கிராமங்களை சேர்ந்த உள்ளூர்மக்கள் 8 பேர், வெளியூர் மக்கள் 11 பேர் என 19 நில உரிமையாளர்கள் காஞ்புரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு, தாங்கள் நிலங்களை வழங்க சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். அதன்படி 19 பேரின் 17.52 ஏக்கர் பரப்பளவு கொண்ட ரூ.9 கோடியே 22 லட்சம் மதிப்புள்ள நிலத்தை காஞ்புரத்தில் உள்ள எண்-2, எண்-4, ஆகிய 2 இணை சார் பதிவாளர் அலுவலகங்களில் நில எடுப்பு அதிகாரிகள் முன்னிலையில் நில உரிமையாளர்கள் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி முதலீட்டு கழக நிறுவனத்துக்கு பத்திரப்பதிவு செய்து தந்தார்கள். மொத்தம் 3,331.25 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், இதுவரை 17.52 ஏக்கர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசுக்கும் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலம் அந்த பகுதியில் இருக்கிறது. சுமார் 4300 ஏக்கர் நிலப்பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

24 மணி நேரத்தில் பணம்

நேற்று நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்த நில உரிமையாளர்கள் அனைவருக்கும் உடனடியாக நிலத்திற்கான இழப்பீட்டு தொகையை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 24 மணி நேரத்தில் அக்கவுண்டில் பணம் விழுக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்டத்திற்கு நில உரிமையாளர்கள் நிலங்களை பத்திரப்பதிவு செய்து கொடுக்க தொடங்கி உள்ளதால் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. அடுத்த 3 ஆண்டுக்குள் பரந்தூரில் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போராட்டக்குழு எதிர்ப்பு

இந்நிலையில் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்ட குழு தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் கதிரேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத்தை எதிர்த்து 3 வருடங்களாக போராடி வரும் நிலையில் விவசாய நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிடுவது, பண மதிப்பீட்டிற்கான அரசாணை வெளியிடுவது போன்ற தவறான முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

ஒரு பிடி நிலம் தரமாட்டார்கள்

இதுபோன்ற எந்தவிதமான பூச்சாண்டி காட்டினாலும் பரந்தூர் பகுதி விவசாய மக்கள் ஒரு பிடி நிலத்தையும் கொடுக்க மாட்டார்கள். இதனை நன்கு உணர்ந்த மாவட்ட நிர்வாகம், பரந்தூர் பகுதியில் நிலத்தில் முதலீடு செய்துள்ள வெளியூர் நபர்களை வாகனம் மற்றும் உணவு ஏற்பாடு செய்து அழைத்து வந்து வலுக்கட்டாயமாக அவர்களது நிலங்களை பத்திரப்பதிவு செய்து வருகின்றனர்.

பரந்தூர் மக்கள் நிலத்தை தர முன்வந்ததாக மாயத்தோற்றம்

இதன் மூலம் புதிய விமான நிலைய திட்டத்துக்காக பரந்தூர் பகுதி விவசாய மக்கள் நிலங்களை கொடுக்க முன்வந்து விட்டனர் என்ற மாய தோற்றத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு முயற்சிப்பதை எங்கள் பகுதி விவசாய மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். விவசாயிகளை ஜனநாயக படுகொலை செய்யும் தமிழ்நாடு அரசுக்கு போராட்ட குழுவின் சார்பாக கடுமை யான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். உடனடியாக அனைத்து அரசியல் கட்சிகளின் துணையோடு மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும். விவசாய பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். நம்முடைய சட்ட போராட்டத்துக்கான முன்னெடுப்பு பணி ஒருசில நாட்களில் தொடங்கும்" இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+