"தீ பரவட்டும்" வார்த்தைக்கு தடை.. பராசக்தி படத்திற்கு சென்சார் நன்மை செய்திருக்கிறது.. தராசு ஷ்யாம்!
சென்னை: பொள்ளாச்சியில் நடைபெற்ற இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மையமாக வைத்து பராசக்தி படம் உருவாக்கப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டமே மையக்கரு என்பதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பராசக்தி திரைப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் படத்தில் மொத்தமாக 27 இடங்களில் வசனங்களை மாற்ற தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் என்பதால், படக்குழு வேறு வழியின்றி ஒப்புக்கொண்டதாக தெரிய வந்துள்ளது.

அதில் குறிப்பாக இந்தி என் கனவை அழித்தது, இந்தி அரக்கி, இந்தி கத்துகிட்டு என்று வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளது. அதேபோல் அறிஞர் அண்ணா எழுதிய புத்தகத் தலைப்பான தீ பரவட்டும் என்ற வார்த்தைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நீதி பரவட்டும் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற வசனமான "இங்கு யார் ஆண்டாலும் இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆள்கிறான்" என்ற 22 நொடி வார்த்தையும் நீக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே விவாதமாகி இருக்கிறது. இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், படைப்பு சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. இந்த படத்திற்கு என்று இல்லை..
பொதுவாகவே தணிக்கை வாரியத்தின் நடவடிக்கை மூலமாகவே கண்டறிய முடியும். உட்தா பஞ்சாப், பத்மாவத், சீதா vs ஸ்டெட் ஆஃப் கேரளா என்று ஏராளமான படங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மோடி, அமித்ஷா கோபித்துக் கொள்வார்கள் என்று தணிக்கை அதிகாரிகளே நினைக்கிறார்கள். இவர்களின் பதவியே அரசியல் பதவி தான்.
1964ல் வெளி வந்த புத்தகம் தீ பரவட்டும். அதன்பின் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம்.. 1930களில் இருந்தே தென்னிந்தியாவில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் தொடங்கிவிட்டது. அண்மையில் மறைந்த எல்.கணேசன் மொழிப்போர் போராட்ட தளபதி.. இந்த நூல் போராட்டத்தின் ஒரு பகுதி.. மொழிப்போர் உணர்வு குறித்த செய்திகளை இந்த தலைமுறைக்கு கொண்டு செல்லவில்லை.
தற்போது சென்சார் மூலமாக இளம் தலைமுறைக்கு இந்த செய்திகளை சொல்ல முடிகிறது. உண்மையில் சென்சார் நமக்கு நன்மையை தான் செய்திருக்கிறது. ஏனென்றால் சென்சார் கட் செய்யவில்லை என்றால், இதுதொடர்பான விவாதமே நடந்திருக்கிறது. படம் பார்த்து ஒவ்வொரு நபராக தேடி படிக்க வேண்டும். இந்தியா முழுக்க சென்சாரின் நடவடிக்கை தொடர்பாக ஏராளமான விமர்சனங்களை செய்ய முடியும்.
யூட்யூப் மூலமாக அன் கட் பராசக்தி படத்தை கொண்டு செல்ல முடியும். ரீல்ஸ், ஷார்ட்ஸ் மூலமாக எளிதாக வீடியோக்களை வெளியிட முடியும். இன்றைய யுகத்தில் யாராலும் எதையும் தடுக்க முடியும். சென்சாரின் சம்பவத்தால் இளம் தலைமுறைக்கு இன்னும் வேகமாக இந்த செய்திகள் சென்று சேரும் என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications