கடைசி நேரத்தில் ‘பராசக்தி’ படத்துக்கு வந்த சிக்கல்! ஆங்காங்கே கத்தரி போட சொன்ன சென்சார் போர்டு! பரபர
சென்னை: தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'பராசக்தி'. இந்தப் படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆனால், படம் சென்சார் குழுவில் பரிசீலனைக்கு சென்றபோது சில சிக்கல்கள் எழுந்துள்ளன. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று குழுவினரிடம் கூறியுள்ளனர். இதனால் படக்குழு அதிர்ச்சியடந்துள்ளது.
மேலும், தணிக்கைக் குழுவின் இந்த முடிவை ஏற்காமல், 'பராசக்தி' படக்குழு மறு தணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளது. அதாவது, மீண்டும் படம் பார்க்கப்பட வேண்டும், அதன் பிறகே முடிவு எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர். இதனால் இந்த படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பராசகதி டம் 1960களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. மொழி தொடர்பான பிரச்சனைகள் கதையின் முக்கிய அம்சமாக உள்ளன. இதுவே சில காட்சிகள் குறித்து சென்சார் குழு கேள்வி எழுப்ப காரணமாகியுள்ளது.

'பராசக்தி' படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையை ஜி.வி. பிரகாஷ் அமைத்துள்ளார். இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு முன்பு இந்தப் படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு ஜனவரி 10ஆம் தேதிக்கு முன்னோக்கி வரவைக்கப்பட்டது.
இதே நேரத்தில், நடிகர் விஜய் கடைசி படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் விஜய் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஹெச். வினோத் இயக்கிய இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது. அதாவது, ஜனவரி 9ஆம் தேதி 'ஜனநாயகன்' திரைக்கு வரும். அதற்கு அடுத்த நாள் ஜனவரி 10ஆம் தேதி 'பராசக்தி' வெளியாகிறது.
இதனால் இரண்டு பெரிய படங்கள் தொடர்ந்து வெளியாகும் நிலை உருவாகியுள்ளது. இதற்கிடையே 'பராசக்தி' படத்திற்கு ஏற்பட்ட தணிக்கை சிக்கல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படக்குழு மறுதணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளதால், இறுதி முடிவு எப்படியாக இருக்கும் என்பது திரையுலகில் பேசுபொருளாக உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications