பெற்றோர்களே இதை கவனிங்க...பப்ஜி கேம் போல் புதிய கேம்...பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் செய்த காரியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வண்ணாரப்பேட்டையில், ஆன் லைன் ப்ரீ பயர் கேம் விளையாட பெற்றோர் தடை விதித்ததால் கேமுக்கு அடிமையான சிறுவன் வீட்டில் இருந்த ரூ.33 லட்சம் ரொக்கம், 213 சவரன் நகையை திருடிக்கொண்டு நேபாளத்திற்கு தப்ப முயன்ற போது போலீஸார் துரிதமாக செயல்பட்டு சிறுவனை பிடித்து பணம் நகைகளை மீட்டுள்ளனர். பப்ஜி கேம் போல் புதிய கேம் சிறுவர்களிடையே பரவி வருவதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆன்லைன் கேம்...அடிமையான சிறுவன்

ஆன்லைன் கேம்...அடிமையான சிறுவன்

சென்னை, வண்ணாரப்பேட்டை, மொட்டை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட் குமார் (42) குடி நீர் வாரியத்தில், லாரிகள் ஒப்பந்ததார் ஆவார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகனுக்கு 15 வயது ஆகிறது, 10ம் வகுப்பு படிக்கும் இவன் ஆனலைன் வகுப்புக்காக செல்போன் வாங்கிய நிலையில் வீட்டில் எந்த நேரமும் செல்போன் கையுமாக ஆன்லைன் கேமில் மூழ்கியுள்ளான். பெற்றோர் பலமுறை கண்டித்தும் ரகசியமாக தனது செயலை தொடர்ந்துள்ளான்.

பப்ஜி கேமைத்தான் தடை செய்துள்ளார்களே எதையாவது விளையாடிவிட்டுப் போகட்டும் என பெற்றோர் கருதிய நிலையில், சிறுவன் தடை செய்யப்பட்ட சூதாட்டம் கொண்ட 'ப்ரீ பயர் கேம்' என்ற கேமில் மூழ்கி தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்தான். திடீரென ஒருநாள் இதைக்கண்டுபிடித்த பெற்றோர், செல்போன் தொடர்புக்கும் அறிவை வளர்க்கவும், நீ கேமுக்கு அடிமையாகி கிடக்கிறாய், இனி விளையாடினால் செல்போனை பிடுங்கி விடுவோம் என அவனை கண்டித்து, அந்த கேமை விளையாட கூடாது என தடை விதித்தனர்.

 கேமுக்கு அடிமையானதால் சிறுவன் செய்த விபரீத காரியம்

கேமுக்கு அடிமையானதால் சிறுவன் செய்த விபரீத காரியம்

பிரீ ஃபயர் கேமில் அடிமையாகிவிட்ட சிறுவனுக்கு பெற்றோர் கண்டிப்பு கடும் கோபத்தை கிளறியுள்ளது. வீட்டில் இருந்தால் கேம் விளையாட முடியாது, பணம், நகைகளை எடுத்துக்கொண்டு ஓடிவிடலாம் என முடிவு செய்து திட்டமிட்டப்படி வீட்டிலிருந்து பணம் நகைகளை எடுத்துக்கொண்டு காணாமல் போய்விட்டான். மகனைக்காணாமல் தேடிய பெற்றோர் அவனது செல்போனுக்கு போன் செய்து பார்த்தபோது அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ந்துப்போயினர்

 நேபாளம், கொல்கத்தாவிலிருந்து இயங்கு ஃப்ரீ ஃபயர் கேம்

நேபாளம், கொல்கத்தாவிலிருந்து இயங்கு ஃப்ரீ ஃபயர் கேம்

இதையடுத்து சிறுவனை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. அவனது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் போலீஸார் கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறினர். சிறுவன் விளையாடும் ஃப்ரீ ஃப்யர் கேம் நேபாளம், கொல்கத்தா, காட்மாண்டு பகுதிகளில் மிகவும் பிரபலமானது என்றும், அது ஒரு சூதாட்டத்தின் விளையாட்டு என கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவன் அங்கு சென்றிருக்கலாம் என்கிற கோணத்தில் தேட ஆரம்பித்தனர்.

 ஐபோன்...சிம்கார்டு வசமாக சிக்கினான்

ஐபோன்...சிம்கார்டு வசமாக சிக்கினான்

ஃபிரீ ஃபயர் கேமில், நேபாளம், கொல்கத்தா, காட்மாண்டு பகுதிகளில் உள்ள நண்பர்கள் பழக்கம் ஆகியிருக்கலாம், அவர்களிடம் பேசி, நேபாளம் செல்ல இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இந்நிலையில் சிறுவனின் சிம் கார்டு வேலை செய்ய தொடங்கியதும் போலீஸார் அலர்ட் ஆகினர். இம்முறை அது ஐபோன் மூலம் கனெக்ட் ஆகியிருந்தது.

அந்த டவரை வைத்து போலீஸார் ஆய்வு செய்தபோது அது தாம்பரம் அருகே சிக்னல் காட்டியது. உடனடியாக செயல்பட்ட போலீஸார் விரைந்து தாம்பரம் சென்றனர். அங்கு பணம் நகைப்பையுடன் நின்றிருந்த சிறுவனை பிடித்து வண்ணாரப்பேட்டைக்கு அழைத்து வந்தனர். நகை, பணத்தை பத்திரமாக மீட்டனர். பின்னர், பெற்றோரை வரவழைத்து, நகை, பணத்தை ஒப்படைத்த போலீஸார் பெற்றோர் கேட்டுக்கொண்டதற்கிணங்க சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யாமல் சிறுவனை எச்சரித்து அனுப்பி வைத்தனர்

 போலீஸாரின் மெச்சத்தகுந்த பணி

போலீஸாரின் மெச்சத்தகுந்த பணி

15 வயது சிறுவன் ரூ.33 லட்சம் பணம் 232 சவரன் நகையுடன் அலங்க மலங்க தாம்பரம் அருகே திரிந்ததை விவரித்த போலீஸார் நல்வாய்ப்பாக சிறுவன் சமூக விரோதிகள் பார்வையில் படவில்லை பட்டிருந்தால் ஆசை வார்த்தைக்கூறி அழைத்துச் சென்று பணம் நகையை வழிப்பறி செய்து சிறுவனையும் கொல்ல வாய்ப்பிருந்தது. சிறுவன் சரியான நேரத்தில் ஆன்லைன் மோக அடிமையினால் செல்போனை ஆன் செய்ததும் எங்களுக்கு சிக்னல் கிடைத்து விரைந்து சென்று பிடித்துவிட்டோம் என்று தெரிவித்தனர். சிறுவனை புகார் பெற்ற 24மணி நேரத்தில், 3 தனிப்படை போலீஸார் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

 பெற்றோர்களே கவனம்

பெற்றோர்களே கவனம்

ஆன்லைன் கேம் எனும் கொடிய நோய் செல்போன் வழியே இன்று நாம் விரும்பாவிட்டாலும் நம்மை விளையாட தூண்டுகிறது. இளம் வயதில் ஆன்லைன் வகுப்புக்காக பெற்றோர் செல்போன்களை வாங்கிக்கொடுக்கும் போது ஆண்ட்ராய்டு போன் என்பதால் பின்னர் அதை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். நம் பிள்ளை நல்லவன் அப்படி எல்லாம் செய்யமாட்டான் என்கிற எண்ணம் இருக்கக்கூடாது எப்போதும் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அதேப்போல் நகை, பணம் உள்ளிட்டவற்றை வீட்டில் ஒருவர் கையில் சாவி இருப்பது போல் வைத்து பராமரிக்க வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+