Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா பரவல்.. ஸ்கூல் போற மாணவர்கள் கவனம்.. பெற்றோருக்கு முக்கிய அறிவுரை சொன்ன அமைச்சர் மா.சு.!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும்போது, கொரோனா அறிகுறி இருக்கிறதா என்று பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று புதிதாக 1,063 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 64 ஆயிரத்து 131 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 497 பேருக்கும், செங்கல்பட்டில் 190 பேருக்கும், கோவையில் 50 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் மறைந்த கவிஞர் கண்ணதாசனின் 96வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழகத்தில் குறைவு

தமிழகத்தில் குறைவு


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், பல நாடுகளில் வைரஸ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் எண்ணிக்கை இரட்டிப்பாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. டெல்லியில் 2 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆனால் சென்னையில் கொரோனா பாதிப்பு 10 முதல் 15 சதவிகிதம் வரை மட்டுமே உயர்ந்துள்ளது.

புதியக் கட்டுப்பாடுகள் இல்லை

புதியக் கட்டுப்பாடுகள் இல்லை

கொரோனா வைரஸால் உயிரிழக்கும் சூழல் குறைவாகவே உள்ளது. BA 4, BA 5 வகை வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது. ஆனால் உயிரிழப்புகள் ஏற்படாது. மக்கள் எச்சரிக்கையாக இருந்தாலே போதும். தமிழகத்தில் கொரோனா அதிகரித்தாலும், தற்போதைக்கு புதியக் கட்டுப்பாடுகள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 பெற்றோருக்கு எச்சரிக்கை

பெற்றோருக்கு எச்சரிக்கை

தொடர்ந்து, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும்போது கொரோனா அறிகுறி இருக்கிறதா என்று கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், தொண்டை எரிச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். உடல்நிலை சரியில்லாத குழந்தைகள், பள்ளிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சிகிச்சை நிலவரம்

சிகிச்சை நிலவரம்

மேலும், தமிழகத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 92 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். 18 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று எடுத்துக்கொள்ளாமல், அவசியம் என்று கருத வேண்டும். கொரோனா பரவல் அதிகரிப்பதால், சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனை மீண்டும் கொரோனா மருத்துவமனையாக மாற்றப்படும் என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+