தட்கல் டிக்கெட்! தீபாவளி டிக்கெட் புக் செய்ய போன பயணிகளுக்கு ஷாக்.. ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு பலரும் சொந்த ஊர் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய தட்கல் செய்து வருகிறார்கள். இன்று காலை 10 மணிக்கு தட்கல் டிக்கெட் புக்கிங்கிற்கான ஐஆர்சிடிசி இணையதளம் ஓபன் ஆகிய சில நொடிகளில் முடங்கியது. ஏராளமானோர் ஒரே நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ததால் சர்வர் முடங்கியது. தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முடங்கியதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். இதனால், பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த சிறப்பு ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். நேற்று முன் தினத்தில் இருந்தே ரயில், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியதை பார்க்க முடிந்தது. இதனால், சென்னை போன்ற பெருநகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
சென்னை எக்மோர், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்வே பிளாட்பார்மில் நிற்க முடியாத அளவிற்கு பயணிகள் கூட்டம் அலைமோதியது. தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள் கடைசி முயற்சியாக தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய தீவிரம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் நாளை பயணம் செய்வதற்கு இன்று தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
தட்கல் டிக்கெட் முன்பதிவை பொறுத்தவரை ஏசி கோச்ச்களுக்கு காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத ஸ்லீப்பர் கோச்ச்களுக்கு 11 மணிக்கும் முன்பதிவு தொடங்குகிறது. இன்று காலை 10 மணிக்கு தட்கல் தொடங்கிய நிலையில், சில நிமிடங்களில் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதால் பயணிகள் திண்டாடினர்.
டிக்கெட் முன்பதிவுக்கு பலருக்கும் பேமெண்ட் ஆப்ஷன் வரை சென்று, அதன்பிறகு டிக்கெட் புக் செய்ய முடியாத அளவிற்கு எரர் காட்டியது. இதனால், பயணிகள் டிக்கெட் போட முடியாமல் தவித்தனர். தற்போது ஐஆர்சிடிசி இணையதளம் வழக்கம் போல செயல்பாட்டுக்கு வந்தாலும், டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
காலை 11 மணிக்கு ஸ்லீப்பர் கோச்சுகளுக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளதால், பயணிகள் இந்த தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய ஆயத்தமாகி வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications