Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எண்ணூர் கழிமுகத்தை பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலமாக அறிவிக்கணும்! சவுமியா அன்புமணி வலியுறுத்தல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எண்ணூர் கழிமுகத்தை பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலமாக அறிவிக்க வேண்டும் என பசுமைத் தாயகம் அமைப்புத் தலைவர் சவுமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை எண்ணூர் எண்ணெய் கசிவு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 3, 4, 5 ஆம் தேதிகளில் பெய்த பெருமழை மற்றும் வெள்ளத்தால், டிசம்பர் 4 முதல் மணலி தொழிற்பேட்டை வழியாக பக்கிங்காம் கால்வாயில் எண்ணெய் கழிவுகள் வரத்தொடங்கின. வீடுகள், கடைகள், படகுகள் அனைத்து இடங்களிலும் கழிவுகள் படிந்தன. ரசாயன மாசுக்காற்று மக்களை பாதித்தது. மூச்சுவிடவே சிரமப்பட்டனர்.

Pasumai thayagam president Soumya Anbumani, has urged that the Ennore estuary should be declared a protected wetland.

மீன்கள், பறவைகள் செத்து மிதந்தன. மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டனர். மக்கள், கால்நடைகள், விலங்குகள், உயிர்ச்சூழல் என அனைத்தும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் பாழானதாலும், முகத்துவாரப்பகுதியில் எண்ணெய் கழிவு மிதப்பதாலும், முகத்துவாரக்குப்பம், நெட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம், காட்டுக்குப்பம், தாழங்குப்பம், சிவன்படை வீதி, மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளின் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல முடியவில்லை.

இந்நிலையில், எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி நேரில் பார்வையிட்டு, சிவன் படை குப்பம், கமலம்மாள் நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது பேசிய சௌமியா அன்புமணி, “எண்ணூர் எண்ணெய் கசிவு தான் தமிழ்நாட்டின் கடைசி நிகழ்வாக இருக்க வேண்டும். தற்போது அரசு அறிவித்துள்ள இழப்பீடுகள் மிக மிகக் குறைவானது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழுமையான இழப்பீட்டை அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சூழலமைப்பை மறுசீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.''

''இவற்றுக்காக மாசுபடுத்தியவரே பொறுப்பேற்கும் கோட்பாட்டை (Polluter Pays Principle) முழுமையாக செயலாக்க வேண்டும். மேலும், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் 2022ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தவாறு, எண்ணூர் கழிமுகப் பகுதியை பாதுகாக்கப்பட்ட சதுப்புநிலப்பகுதியாக அறிவித்து, இப்பகுதியின் சூழலியல் அமைப்பை முழுமையாக மீளுருவாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், “டிசம்பர் 4 அன்றே எண்ணெய் கசிவு விவரம் வெளியானாலும், சிபிசிஎல் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அதனை மூடி மறைத்தன. எண்ணெய் கசிவே இல்லை என்றும், லேசான சுவடுகள்தான் உள்ளன என்றும் தவறான தகவல்களை வெளியிட்டன. இதற்கு மாறாக, சிபிசிஎல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் உண்மையை உடனடியாக ஏற்றிருந்தால் பாதிப்புகளை பெருமளவு தடுத்திருக்கலாம்.''

''எண்ணெய் கசிவுகளை தடுப்பதற்கும், உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதற்குமான தேசிய எண்ணெய் கசிவு பேரிடர் பாதுகாப்புத் திட்டத்தின் (National Oil Spill Disaster Contingency Plan, 2015) கீழ் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் கீழ் மாநில அளவிலும் மாவட்டங்களிலும் எண்ணெய் கசிவுகளை தடுப்பதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன (State Level Oil Spill Crisis Management Group, District Crisis Management Group). அவை உடனுக்குடன் செயல்படவில்லை.''

'' மேலும், எண்ணெய் கசிவுகளை உடனுக்குடன் அகற்றுவதற்கான நவீன கருவிகள் துறைமுகங்களில் வைத்திருக்க வேண்டும் என்கிற விதிமுறை உள்ளது. இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செயல்படுத்தவில்லை. எண்ணெய் கழிவுகளை அகற்ற நவீன தொழில்நுட்பங்களை புகுத்தாமல் சாதாரண காகிதத்தையும் நெகிழி குவளைகளையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.''

''2017ஆம் ஆண்டில் சென்னை துறைமுகம் அருகே கப்பல்கள் மோதிக்கொண்டதில் எண்ணெய் கசிந்த வழக்கில் 240 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. தற்போது, உடல்நல பாதிப்புகள், வருமான இழப்புகள் உள்ளிட்ட அனைத்துக்கும் இழப்பீடு அளிக்க வேண்டும். எண்ணெய் கசிவின் சேதம் முழுவதுமாக மதிப்பீடு செய்யப்பட்டு, அனைத்து தரப்பினருக்கும் முழு இழப்பீட்டை பாதிப்புகளுக்கு காரணமான நிறுவனங்கள்டமிருந்து வசூலித்து அளிக்க வேண்டும். அவ்வாறே, சுற்றுச்சூழலில் நேர்ந்துள்ள பாதிப்புகளை சீரமைப்பதற்கான பணிகளை அந்நிறுவனங்களின் இழப்பீட்டின் மூலம் மேற்கொள்ள வேண்டும்.''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+