Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டா மாறுதல் இருக்கா? வீடு, நிலம் வாங்கறீங்களா? பத்திரப்பதிவு சட்டத்திருத்தம்.. இது ஹைகோர்ட் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்தம் குறித்து, சென்னை ஹைகோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.

நிலத்தை வாங்கி விற்பதற்கு பத்திரங்கள் என்பது மிகமிக அவசியமானது.. அதனால்தான், போலி பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரிகைபோலவே உருவாக்கி மோசடிகள் அதிகரித்து வருகிறது.

Patta Change and what did Chennai High court say about amendment of deed registration act to the Tamil Nadu Government

தமிழக அரசு: ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள் மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடைபெறும் பட்சத்தில் அவை கண்டறியப்பட்டால், சார்பதிவாளரோ, பத்திரப் பதிவுத்துறை ஐஜியோ அதனை ரத்து செய்யக் கோரி, கோர்ட்டின் உதவியை சம்பந்தப்பட்டவர்கள் நாடலாம்.. அந்தவகையில், போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே இதுநாள் வரை இருந்து வந்தது.

ஆனால், அந்த நிலையை மாற்றி, இனி பத்திரப்பதிவுத்தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை, தமிழக சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது... கடந்த 2022 ஆகஸ்ட் 16 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. இதன்மூலம், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டதுடன், சட்ட திருத்தத்தை முன்தேதியிட்டு அமல்படுத்தி, ஆயிரக்கணக்கான பத்திர பதிவுகளும் ரத்து செய்யப்பட்டன

வழக்குகள் : இந்நிலையில், தமிழக அரசின் இந்த புதிய சட்ட திருத்தத்தை எதிர்த்து புதுக்கோட்டை வளர்மதி, திருச்செங்கோடு நித்யா பழனிச்சாமி, விழுப்புரம் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்தனர். அதில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது:

"தமிழக அரசு கடந்த 2022-ம் ஆண்டு பத்திர பதிவு சட்டத்தில் கொண்டு வந்துள்ள பிரிவு 77-ஏ, 77-பி ஆகிய பிரிவுகளின்கீழ் போலியாக பதியப்பட்ட பத்திரங்களை மாவட்ட பதிவாளரே ரத்து செய்யலாம் என்றும், அதுதொடர்பான மேல்முறையீட்டை பத்திர பதிவு துறை தலைவர் விசாரிக்கலாம் என்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தன்னிச்சையானது. பல்வேறு முறைகேடுகளுக்கு இது வழிவகுத்துள்ளது. எனவே, இந்த சட்ட திருத்தம் செல்லாது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.

வழக்கு: இதையடுத்து, இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் சொன்னதாவது:

"இந்த புதிய சட்ட திருத்தத்தின்கீழ் எந்த வழிமுறையோ, விதிமுறைகளோ, வழிகாட்டு நெறிமுறைகளோ வகுக்கப்படவில்லை. சொத்துக்கு சம்பந்தம் இல்லாத 3-வது நபர் புகார் அளித்தாலும், அதன்பேரில் பத்திர பதிவை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு வானளாவிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால், அதிக அளவில் துஷ்பிரயோகம் நடக்கிறது.

நிறுத்தி வைக்க கோரிக்கை: 90 வயது மூதாட்டியின் பெயரில் 60 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட பத்திர பதிவை ரத்து செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது... இந்த விசாரணையை மாவட்ட பதிவாளர் எப்படி நடத்த வேண்டும்? அதற்கான காலவரம்பு என்ன? என்பதற்கு எந்த விதியும் வகுக்கப்படவில்லை.

அதுமட்டுமல்லாமல், சொத்தின் உரிமை தொடர்பான ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் என்பதுடன், இது இயற்கை நீதிக்கு புறம்பானாகவும் உள்ளது.. எனவே, இந்த சட்ட திருத்தம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்" வாதிட்டார்... இதுதொடர்பாக அரசின் நிலைப்பாடு அறிந்து பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் கேட்டுக் கொண்டார்.

மோசடி பத்திரம்: இதையடுத்து நீதிபதிகள், மோசடி பத்திர பதிவுகளை ரத்து செய்யும் வகையில் மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் இந்த சட்ட திருத்தம் தொடர்பாக ஏப்ரல் 4-ம் தேதிக்குள் தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்றும், அதுவரை இந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றும் நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+