பட்டா.. கோவில் நிலத்தில் வசித்தால் பட்டா கிடைக்குமா? யாருக்கெல்லாம் பட்டா இல்லை? தமிழக அரசு தெளிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்டா வழங்குவது தொடர்பாக நிலையான வழிகாட்டுதல்களுடன் அரசாணையை தமிழக அரசு 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. அதில் யாருக்கெல்லாம் பட்டா கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு, பட்டா வழங்க புதிய விதிமுறைகளில், கோவில் வகைப்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, கோவில்களுக்கு பலபேர் நிலங்களை தானமாக வழங்கியிருப்பதுடன், அதில் பெரும்பாலானவற்றுக்கு கோவில் பெயரில் முறையாக பட்டா பெற்றுள்ளனர். சிலர் அதை நீண்டகாலமாக ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதால், பட்டா பெற முயற்சித்து வருகின்றனர்.

Patta temple lands Tamil Nadu Government

புறம்போக்கு நிலங்கள் - பட்டா

அதேபோல, கோவில்களுக்கு வழங்கப்பட்ட சில நிலங்கள், புறம்போக்கு நிலங்களாகவும் உள்ளன.. அந்த நிலங்கள், "கோவில்" என்ற வகைபாட்டில் கொண்டு வரப்பட்டு, அதில் வசிப்போரும் பட்டா பெற முயற்சித்து வருகிறார்கள்.

அதேபோல, கோயிலுக்குத் தேவைப்படாத நிலங்களை ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்தும் அந்த நிலத்துக்கான விலையை கோயிலுக்கு வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2021ல், தமிழக அரசு, புறம்போக்கு நிலங்களில், 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு, பட்டா வழங்குவதற்கான வரன்முறை திட்டத்தை அறிவித்திருந்தது.. அதில், கோவில் நிலங்களில் வசிப்போருக்கும் பட்டா கிடைக்கும் என்று தெரிவித்திருந்தது.. இதை எதிர்த்து, பலரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது, கோவில் நிலங்களுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் பெயரில் பட்டா வழங்க மாட்டோம் என்று அரசு நீதிமன்றத்தில் உறுதி கூறியிருந்தது.

வழிகாட்டுதல்கள் - பட்டா

இதனிடையே, 2 நாட்களுக்கு முன்பு, பட்டா வழங்குவது தொடர்பாக நிலையான வழிகாட்டுதல்களுடன் அரசாணையை அரசு வெளியிட்டிருந்தது. அதில் யாருக்கெல்லாம் பட்டா கிடையாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது..

இந்த திட்டத்தின்படி, "பயன்பாட்டில் உள்ள பயன்பாட்டில் இல்லாத தரிசு நிலங்கள், கல்லாங்குத்து, புறம்போக்கு, கிராம நத்தம், அரசு நஞ்சை மற்றும் புஞ்சை மற்றும் பிற புறம்போக்கு நிலங்களில் வசிப்பர்களுக்கு பட்டா வழங்கப்படும்... ஆனால், நீர் நிலைகள், கோவில், வழிபாட்டு தலம் மற்றும் வக்பு வாரியத்தின் பட்டா நிலங்கள், ஒன்றிய அரசு நிலங்கள் ஆகியவற்றில் வசிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பட்டா பெற முடியாது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோவில் வகைப்பாடு - தெளிவு

அதாவது, கோவில்கள், தேவாலயங்கள், வக்பு வாரியம் பெயரில் உள்ள நிலங்களில் வசிப்போருக்கு, பட்டா வழங்க முடியாது... அதேபோல, "கோவில்" வகைபாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கும், இந்த சிறப்பு திட்டத்தில் பட்டா வழங்கப்படாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, "முந்தைய அரசாணைகளை சுட்டிக்காட்டி, கோவில் நிலங்களுக்கு பட்டா பெற முயற்சிக்கக்கூடாது என்பதற்காகவே, எந்தெந்த நிலங்களுக்கு பட்டா வழங்கப்படும் என்பதை தனி விதிமுறையாக குறிப்பிடப்பட்டுள்ளது" என்றனர.

யார் யாருக்கு பட்டா வழங்கப்படும்

மாவட்ட தலைநகரம் மற்றும் மாநகராட்சிகளின் புற எல்லையில் இருந்து 18 கிலோ மீட்டர் சுற்றளவு மற்றும் நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளின் புற எல்லையில் இருந்து 8 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பெல்ட் எரியாவில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும்..

அதேபோல, 3 லட்சம் மற்றும் அதற்கு குறைவாக ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக பட்டா வழங்கப்படும்... அதேபோல, 3 லட்சத்திற்கு அதிகமாக ஆண்டு வருமானம் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள் அந்த நிலத்தின் மதிப்பை செலுத்தினால் பட்டா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+