ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம்: இலங்கைக்கு எதிராக நாளை தீர்மானம்- இந்தியா ஆதரிக்க பழ. நெடுமாறன் அப்பீல்
சென்னை: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பழ. நெடுமாறன் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக இழைத்துவரும் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதற்கு எதிரான கண்டனத் தீர்மானம் ஒன்றினை பிரிட்டன், கனடா, செர்மனி உட்பட சில நாடுகள் இணைந்து ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் கொண்டுவரவிருக்கின்றன.
இத்தீர்மானத்திற்கு எதிராகவும், தனக்கு ஆதரவாகவும் வாக்களிக்கும்படிப் பல்வேறு நாடுகளை இலங்கை அணுகியுள்ளது. வழக்கம்போல சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவுத் தெரிவித்துள்ளன.
இந்திய அரசும் ஆதரவுத் தெரிவிக்க உறுதி கூறியுள்ளதாக இலங்கை வெளியுறவுத் துறைச் செயலாளர் அறிவித்திருப்பது தமிழர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
2009ஆம் ஆண்டில் இலங்கையில் போர் முடிந்தப் பிறகு, ஐ.நா. மனித உரிமைக் குழு நிறைவேற்றியப் பல தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளவும், செயல்படுத்தவும் இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வந்துள்ளது. இந்த நிலையில் வருகிற மார்ச் 22ஆம் தேதி கூடவிருக்கும் ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக பிரிட்டன் உட்படப் பல நாடுகள் இணைந்து கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தை இந்திய அரசும் ஆதரிக்கவேண்டும் என்றும், அதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு எதிரான அநீதிகளிலிருந்து அவர்களைக் காக்க முன்வரும்படியும் வேண்டிக்கொள்கிறேன்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications