சின்னப்புள்ளத்தனம்.. ஆளுநருக்கு எதிராக திரைத்துறையில் ஆவேசக் குரல்! ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமா அது?
சென்னை: பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் ஏன் குழந்தைத் தனமாக நடந்துகொள்கிறார்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.
2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நேற்று தொடங்கியது. ஆளுநர் ரவி தனது உரையை வாசிக்கத் தொடங்கி முழுவதுமாக படிக்காமல் நிறுத்தினார். அந்த உரையில் இடம்பெற்று இருந்த தமிழ்நாடு அரசின் சாதனை திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வாசிக்காமல் ஆளுநர் உரையை நிறுத்தினார். இதனால் ஆளுநரின் முழு உரையையும் சபாநாயகர் அப்பாவு வாசித்து நிறைவு செய்தார். ஒரு கட்டத்தில் தேசிய கீதம் ஒலிக்கப்படுவதற்கு முன்பே அங்கிருந்து ஆளுநர் ரவி கிளம்பி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில் ஆளுநர் மாளிகை இது குறித்து விளக்கம் அளித்து இருந்தது. அதில், "பிப்ரவரி 12, 2024அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது நடந்த நிகழ்வுகள் பின்வருமாறு:
1) கடந்த 09.02.2024 அன்று அரசிடமிருந்து ஆளுநரின் வரைவு உரை ஆளுநர் மாளிகையில் பெறப்பட்டது. ஆளுநர் உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் பல பத்திகளில் இடம் பெற்றிருந்தன.
2) மாண்புமிகு ஆளுநர் கீழ்க்கண்ட கருத்துக்களைத் தெரிவித்து கோப்பைத் திருப்பி அனுப்பினார்.
(அ) தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும் மற்றும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், முடிவிலும் அதை இசைத்திட வேண்டும். இது தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் ஆகியோருக்கு ஆளுநர் கடந்த காலங்களிலும் கடிதங்களை எழுதியிருந்தார்.
(ஆ) ஆளுநரின் உரை என்பது அரசின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பிரதிபலிக்க வேண்டும் மற்றும் "சட்டமன்றம் கூடுவதற்கான காரணங்களை" சட்டமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும். இதை தவிர்த்து உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புவதற்கும், பாகுபாடான அரசியல் கருத்துக்களை தெரிவிப்பதற்காக இருக்கக்கூடாது.
3) மாண்புமிகு ஆளுநர் அளித்த அறிவுரையை தமிழ்நாடு அரசு புறக்கணித்து விட்டது.
4) மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இன்று (பிப்ரவரி 12, 2024) காலை 10:00 மணியளவில் சட்டப்பேரவையில் ஆற்றிய உரையில், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர், மாண்புமிகு முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆளுநர் உரையில் முதல் பத்தியை படித்தார். அதில் திருவள்ளுவரின் திருக்குறள் (738) அடங்கியுள்ளது. அதன்பிறகு ஆளுநர் உரையில் உண்மைக்கு புறப்பான தகவல்கள் பல பத்திகளில் இடம் பெற்றிருந்ததை கருத்தில் கொண்டு, அரசியலமைப்பை கேலிகுரியாக்கி விடும் என்ற காரணத்தால் உரையை முழுமையாக படிக்க இயலாமைக்கான விளக்கத்தை ஆளுநர் தெரிவித்தார். சட்டப்பேரவைக்கு தனது மரியாதையை வெளிப்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக இந்த பேரவை கூட்டத் தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்து தனது உரையை முடித்தார்.
5) அதன் பிறகு ஆளுநரின் முழு உரையின் தமிழாக்கத்தை மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் வாசித்தார். மாண்புமிகு ஆளுநர் உரை முடியும் வரை அமர்ந்திருந்தார்.
6) மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஆளுநரின் உரையை வாசித்து முடித்தவுடன், நிகழ்ச்சி திட்டமிடப்பட்டபடி, மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்றார். அச்சமயம், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஆளுநருக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து மற்ற கருத்துகளோடு நாதுராம் கோட்சே பின்பற்றுபவர் என தெரிவித்தார். மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் தனது பொருத்தமற்ற நடவடிக்கையால் தனது பதவியின் கண்ணியத்தையும், சபையின் மாண்பையும் குறைத்துவிட்டார்.
மாண்புமிகு ஆளுநருக்கு எதிராக சட்டப் பேரவை தலைவர் தனது நீண்ட விமர்சனத்தை வெளிப்படுத்திய நிலையில், மாண்புமிகு ஆளுநர் தனது பதவியின் கண்ணியத்தையும் மற்றும் சட்டப்பேரவையின் கண்ணியத்தையும் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியேறினார்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திரையுலகில் இருந்து முதல் எதிர்ப்புக் குரல் கிளம்பி இருக்கிறது. பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில், "ஆர்.என்.ரவி சார் மன்னிக்க வேண்டும். உங்களுடைய நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏன் பாஜக ஆளாத மாநிலங்களின் ஆளுநர்கள் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறார்கள்?" என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!












Click it and Unblock the Notifications