சட்டென ஸ்டாலினை பார்த்த தைவானின் டாப் தலைகள்.. வருகிறது மாபெரும் தொழிற்சாலை.. தமிழ்நாடு நம்பர் 1
சென்னை: தைவானை சேர்ந்த பெகட்ரான் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. பெகட்ரான் உலகில் உள்ள முன்னணி மின்னணு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும்.
தமிழ்நாட்டில் முதலீடுகள் அதிக அளவில் குவிய தொடங்கி உள்ளன. கொரோனாவிற்கு பின் அதிக முதலீடுகளை பெற கூடிய மாநிலங்களில் முன்னிலையில் தமிழ்நாடு உள்ளது. வடஇந்தியர்கள் பலரும் தமிழ்நாடு எப்படி முதலீட்டை ஈர்க்கிறது என்று சொல்லும் அளவிற்கு முதல்வர் ஸ்டாலினின் அரசில் அடுத்தடுத்து முதலீடுகள் குவிந்து வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் 1500 கோடி வரை முதலீடு செய்ய ராயல் என்ஃபீல்டு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி செய்யாறு அருகே 60 ஏக்கர் பரப்பில் தனது முதல் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு ஆலையை அமைக்கிறது. 2025ம் ஆண்டு முதல் இந்த புதிய ஆலையில் இருந்து வாகனங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் ஜப்பானைச் சேர்ந்த மிட்டுபிஷி ( MITSUBISHI ELECTRIC ) நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ரூபாய் 1,891 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க இந்த மெகா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
சென்னையில் இவர்கள் தொழிற்சாலையை அமைக்க உள்ளனர். ஏர் கண்டிஷனர் & கம்ப்ரசர் தொழிற்சாலை தொழிற்சாலை 2 ஆயிரம் ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. 10 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளனர்.
தென்கொரியாவை சேர்ந்த சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் சென்னையில் தனது முதலீட்டை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. அவர்களின் கிளை நிறுவனமான கியா நிறுவனம் கடந்த முறை தமிழ்நாட்டில் ஒப்பந்தம் செய்ய இருந்தது.
ஆனால் அதை தெலுங்கானா அரசு உள்ளே புகுந்து ஒப்பந்தம் செய்தது. இதனால் கடந்த ஆட்சியில் கியா தொழிற்சாலை சென்னைக்கு கிடைக்காமல் போனது. இந்த நிலையில்தான் அவர்களின் Hyundai நிறுவனம் தற்போது சென்னையில் முதலீட்டை விரிவுபடுத்த உள்ளது.
பெரும்பாலும் வாகன உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலையை Hyundai நிறுவனம் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே 11ம் தேதி இந்த ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் சென்னையில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ளது. 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இதற்காக முதலீடு செய்ய உள்ளது.
அடுத்த நிறுவனம்: இந்த நிலையில்தான் அதிரடி திருப்பமாக தற்போது தைவானை சேர்ந்த பெகட்ரான் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. பெகட்ரான் உலகில் உள்ள முன்னணி மின்னணு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிலையில் அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான ஆலோசனைகளை இறங்கி உள்ளது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினை தைவான் நாட்டைச் சேர்ந்த பெகட்ரான் நிறுவனத்தின் குழுமத் தலைவர் திரு.டிஎச் துங்(TH Tung) சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து பேசினார். இதன் மூலம் விரைவில் தமிழ்நாட்டில் அந்த நிறுவனம் முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை வென்று முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது தமிழ்நாடு.
1.86 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதியை இரண்டு ஆண்டுகளில் 5.87 பில்லியன் டாலருக்கு உயர்த்தி அபார சாதனை செய்துள்ளது தமிழ்நாடு. தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின் போது கியா நிறுவனம் முதலீடு செய்யாமல் ஒதுங்கியது. கியா முதலீட்டை பெறுவதற்கு தமிழ்நாடு அரசு எவ்வளவோ முயன்றது.ஆனா அப்போது தமிழ்நாட்டில் பெரிய அளவில் முதலீடுகள் குவியவில்லை. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பெரிதாக நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை.

இதனால் அப்போது மிக முக்கியமான முதலீடான கியா முதலீட்டை தமிழ்நாடு இழந்தது. இது தமிழ்நாட்டிற்கு பெரிய பின்னடைவாக கருதப்பட்டது. ஏனென்றால் அப்போது தமிழ்நாடு - தெலுங்கானா - கர்நாடகா இடையே மிகப்பெரிய முதலீட்டு யுத்தம் நடைபெற்றது.
அந்த யுத்தத்தில் தமிழ்நாடு அப்போது பின்னோக்கி சென்றது. அதிலும் கியா முதலீட்டை ஹைதராபாத் தட்டி தூக்கியது. ஆட்டோமொபைல் தலைமையிடமாக இருந்து கொண்டு தமிழ்நாடு கியா முதலீட்டை பெற முடியாதது பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
இப்போது அதே கியா குழுவில் உள்ள ஹூண்டார் நிறுவன முதலீட்டை தமிழ்நாடு பெறுகிறது. கியா - ஹூண்டாய் எல்லாம் ஒரே குழுமம்தான். இரண்டுமே தென்கொரியாவை சேர்ந்த குழுமம்தான்.கியா தமிழ்நாடு வேண்டாம் என்று 4 வருடங்களுக்கு முன்பு சொன்ன நிலையில், அவர்களையே தற்போது தட்டி தூக்கி ஹூண்டாய் முதலீட்டை தமிழ்நாடு பெற்றுள்ளது. கிட்டத்தட்ட அப்போது இழந்த மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பை தற்போது தமிழ்நாடு அரசு பூர்த்தி செய்து கொண்டது.












Click it and Unblock the Notifications