'திமுக ஆட்சி ஏன் அமைந்தது? என்று மக்கள் இப்போது வருத்தப்படுகிறார்கள்'.. சொல்வது முன்னாள் அமைச்சர்
சென்னை; தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
இந்த நிலையில் கரூர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்து. இந்த கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம். ஆர்.விஜயபாஸ்கர்
பேசினார்.

ஜெயலலிதாவை நினைத்து பார்க்க வேண்டும்
தேர்தலிலே சிறப்பாக அதிமுகவினர் பணியாற்றவேண்டும் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் 50 சதவீத இட ஒதுக்கீட்டை உள்ளாட்சித் தேர்தலில் செய்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்றும் அவரை நினைத்து பார்க்கவேண்டும் என்று அப்போது அவர் கூறினார்.

100% வெற்றி பெற்றோம்.
நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் ஆட்சியில் இருந்தபோது 100% வெற்றி பெற்றோம். இன்றைய சூழ்நிலையில் திமுக அரசு வேறு வழி இல்லாமல் இந்த தேர்தலை அறிவித்திருக்கின்றனர் என்று கூறினார். திமுக அரசு பல வாக்குறுதிகளை கூறியிருந்தாலும் எதுவும் நிறைவேற்றப்படவில்லை ஒரே ஒரு வாக்குறுதியை நிறைவேற்றினார்கள் பேருந்திலேயே மகளிருக்கு இலவசம் என்று ஆனால் இன்றைக்கு 1350 பேருந்துகள் பேட்டரி இல்லாமல் பேருந்துகள் போக்குவரத்து கழகத்தில் நிற்கிறது.

மக்கள் வருத்தம்
புதிய டயர் இல்லாமல் பழைய டயர்களை போட்டு ஓட்ட வேண்டிய நிலைமைக்கு போக்குவரத்து கழகம் உள்ளது என்று எம். ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னையில ஒரு சதவீதம் மட்டுமே மகளிருக்கு இலவசம் என்று பேருந்துகள் ஓடிக் கொண்டிருப்பதாக கூறிய அவர் திமுகவினருக்கு பொய் சொல்வது கைவந்த கலை அதேபோல விஞ்ஞானபூர்வமான ஊழல் செய்வதில் கைதேர்ந்தவர்கள் என குற்றச்சாட்டு தெரிவித்தார் இந்த ஒன்பது மாத ஆட்சி காலத்தில் மக்களே ஏன் இந்த ஆட்சி அமைந்தது என்று வருத்தப்படக் கூடிய சூழ்நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications