திமுக மீதும், ஸ்டாலின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை... தமிழிசை சொல்கிறார்
Recommended Video
சென்னை: டிடிவி தினகரனும், திமுகவும் மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளனர் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், என்னுடைய பிரசாரம் தமிழக இடைத்தேர்தலிலும் இருக்கும், வடநாட்டு தேர்தலிலும் இருக்கும் என்றார். தமிழகத்தில் அரசியல் ஸ்திரத் தன்மையற்ற நிலையை ஏற்படுத்தும் நடவடிக்கையில் திமுக ஈடுபட்டு வருவதாகவும் தமிழிசை குற்றஞ்சாட்டினார்.

மேலும், தினகரன், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் பதற்றத்தோடு உள்ளனர். நாங்கள் வெளிப்படையாக கூட்டணி அமைத்துள்ளோம். ஆனால் தினகரன் திமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளார்.
உளவுத்துறை மூலம் 40 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என செய்தி வந்துள்ளதாக ஸ்டாலின் சொல்வது, முற்றிலும் தவறு. எங்கள் உளவுத்துறை கருத்துபடி நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்றும் தமிழிசை கூறினார்.
மக்கள் ஸ்டாலின் மீதும், திமுக மீதும் தான் நம்பிக்கையில்லாமல் உள்ளனர். அதனால் தான் தூத்துக்குடியில் வாக்கிங் எல்லாம் செல்கிறார். நிச்சயம் கனிமொழி தூத்துக்குடியில் வெற்றி பெறப்போவதில்லை, திமுகவும் வெற்றி பெறப்போவதில்லை என்றும் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர்












Click it and Unblock the Notifications