‛கேன்சர்’ கூட வரலாம்.. எண்ணூர் எண்ணெய் கசிவால் வந்த புதிய சிக்கல்.. சென்னை மக்களே உஷார்
சென்னை: சென்னை எண்ணூரில் மழைநீரில் கச்சா எண்ணெய் கலந்தது. இதையடுத்து சென்னை நெடுக்குப்பம், எண்ணூர் கடற்கரை பகுதியில் மணலை தோண்டினால் எண்ணெய் வெளியேறும் ஷாக் வீடியோ பரவி வரும் நிலையில் மக்களுக்கு கேன்சர் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த மாதம் 3 மற்றும் 4ம் தேதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையின் காரணமாக சென்னை முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் மக்கள் முடங்கினர்.

அதன்பிறகு 5ம் தேதி முதல் சென்னையில் மழை நீரை வெளியேற்றும் பணி விறுவிறுப்பாக தொடங்கியது. சில நாட்களுக்கு பிறகு சென்னையில் தேங்கிய தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டதோடு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
எண்ணெய் கசிவு: முன்னதாக சென்னை எண்ணூர் பகுதியில் மழை வெள்ளத்தில் கச்சா எண்ணெய் கலந்தது. மணலியில் செயல்பட்டு வரும் சிபிசிஎல் எனும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திலிருந்து கசிந்த எண்ணெய் மழைநீரில் கலந்தது. இதனால் மக்களின் வீடு, வாகனங்களில் எண்ணெய் கறை படிந்தது. மேலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து கச்சா எண்ணெயை வாளி மூலம் அகற்றும் பணி என்பது தொடங்கியது.
ஷாக் வீடியோ: இதற்கிடையே தான் கச்சா எண்ணெய் பக்கிங்காம் கால்வாயில் கலந்து கொசஸ்தலை ஆற்றின் வழியாக கடலில் மிக்ஸாகி உள்ளது. இதனால் மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் செத்தன. இதற்கிடையே தான் நெட்டுக்குப்பம் கடற்கரை, எண்ணூர் பகுதியில் பீச் மணலை தோண்டினால் உள்ளே இருந்து எண்ணெய் வெளியேறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரபு நாடுகளை போல்: பொதுவாக துபாய் உள்ளிட்ட எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகளில் தான் ஊற்று தோண்டினால் எண்ணெய் வரும் என நாம் கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால் இப்போது சென்னையிலேயே இத்தகைய நிலை உருவாகி உள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது எண்ணெய் கழிவு அல்து மசகு எண்ணெய் எனவும் அழைக்கப்படுகிறது.
பாதிப்புகள் என்னென்ன: இந்த மசகு எண்ணெய் பூமியில் கலந்தால் என்னாகும் என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மக்களுக்கு கேன்சர் பாதிப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக இப்படி ஒரு சம்பவம் நடந்தால் அது முதலில் சுற்றுச்சூழலை தான் பாதிக்கும். அதோடு மண்வளத்தை கெடுத்து தாவரங்களின் வளர்ச்சியை குறைக்கும். இதுதவிர நிலத்தடி நீர் மாசுபடுவதோடு, குடிநீரின் தரத்தை பாதிக்கும்.
கேன்சர் பாதிப்பு: இவை அனைத்தும் மக்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். இதுதவிர மனிதர்களுக்கு கேன்சர் பாதிப்பும் கூட வரலாமாம். அதாவது இந்த எண்ணெய் ஒருவிதமான நச்சுப்புகையை வெளியிடுமாம். அது மக்களுக்கு தோல் எரிச்சல், சுவாச பிரச்சனைகள் உருவாகலாம். மேலும் உணவு பொருட்கள், தாவரங்களில் இந்த எண்ணெய் கசடுகள் ஊடுருவும்போது அதனை பயன்படுத்தும் மக்களுக்கு உடல்நல குறைபாடுகள் மற்றும் கேன்சர் வரவும் வாய்ப்புள்ளதாம்.

பாதுகாப்பாக இருப்பது எப்படி: இந்த பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்றால் சில பரிசோதனைகளை மேற்கொள்வது முக்கியமானதாகும். அதாவது எண்ணெய் படிந்த பகுதி மற்றும் எண்ணெயால் பாதிக்கப்பட்ட தாவரங்களை எடுத்து பரிசோதிக்க வேண்டும். மேலும் எண்ணெய் ஓடிய பகுதியில் மண்பரிசோதனை செய்து நச்சுத்தன்மையை கணக்கிட வேண்டும். அதோடு நிலத்தின் உள்பகுதியில் நீண்டதூரம் எண்ணெய் ஊடுருவி இருக்கலாம் என கருதினால் நிலத்தடி நீர் சோதனையும் மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம் எண்ணெய் கசிவின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பாக இருக்க முடியும்.
அரசு என்ன செய்ய வேண்டும்: இதுதவிர பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் உதவிகளுக்கு சுற்றுச்சூழல் அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மேலும் முறையான பயிற்சி பெற்றவர்கள் மூலம் எண்ணெய் கழிவை அகற்ற வேண்டும். மாறாக எண்ணெய் கசடுகளை நாமே சுத்தம் செய்ய முயற்சிக்க கூடாது. இதனை செய்தால் அது உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும். அதோடு எண்ணெய் கழிவு நிலத்தில் கசிவது என்பது சாதாரணமான பிரச்சனை இல்லை. அது ஒரு சீரியஸான பிரச்சனயாகும். இதனை உணர்ந்து சுற்றுச்சூழல், மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக நிபுணர்கள் மூலம் அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications