சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஸ்டாலின் அப்பவே சொன்னாரே".. அவ்வளவு செலவு பண்ணி கட்டியது நீங்க நடக்கத்தானா? மெரினாவில் பரபர சம்பவம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மெரினாவில் நடந்த விதி மீறல் ஒன்று கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

தற்போது 2024 ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் கத்தாரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நடந்த இரண்டு சம்பவங்கள் உலகம் முழுக்க கவனம் பெற்றது. முதல் சம்பவம் ஜப்பானுக்கு எதிரான போட்டியில் ஜெர்மனி அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டிக்கு பின்பாக ஜப்பான் ரசிகர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் குதிக்கவில்லை.

மாறாக ரசிகர்கள் சென்ற பின் மைதானத்தை இவர்கள் சுத்தம் செய்ய தொடங்கினார்கள். இதற்காக பெரிய பிளாஸ்டிக் பேக்குகளை அவர்கள் தங்களுடன் கொண்டு வந்து இருந்தனர்.

மீனவர் பிரச்சனை: மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறீங்க- நடவடிக்கை எங்கே? திமுக அரசு மீது சீமான் புகார் மீனவர் பிரச்சனை: மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறீங்க- நடவடிக்கை எங்கே? திமுக அரசு மீது சீமான் புகார்

வீரர்கள்

வீரர்கள்

இரண்டாவது விஷயம்.. வீரர்களும் தங்கள் அறையைவிட்டு செல்லும் போது அதை மொத்தமாக சுத்தம் செய்துவிட்டு சென்றனர். இந்த புகைப்படங்கள்தான் இணையம் முழுக்க வெளியாகி கவனத்தை பெற்றுள்ளது. ஜப்பான் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உலக நாடுகளையே தற்போது கவர்ந்து உள்ளனர். மக்கள் இவர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். உலக நாடுகள் இவர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒழுக்கம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். சுத்தம் என்றால் இதுதான், என்று பாராட்டி வருகிறார்கள். சுத்தம், விதிமுறை, ஒழுக்கத்தை அவர்கள் கடைபிடிக்கும் விதம் உலகம் முழுக்க கவனம் பெற்றுள்ளது.

சென்னை

சென்னை

இந்த நிலையில்தான் சென்னையில் நம் மக்கள் செய்த ஒரு விஷயம் கவனம் பெற்றுள்ளது. ஜப்பான் மக்கள் விதிகளை கடைப்பிடித்து ஒழுக்கமாக இருக்கும் அதே நேரத்தில் நம் மண்ணில் நடந்த விதி மீறல் ஒன்று கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை திறக்கப்பட்டது. சென்னை மெரினாவில் வருடம் இறுதியில் சில வாரங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்தள பாதை அமைக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக அவ்வப்போது வார இறுதி நாட்களில் மட்டும் இந்த சாய்தள பாதைகள் தற்காலிகமாக அமைக்கப்படும்.

 நிரந்தரம்

நிரந்தரம்

இதை நிரந்தரமாக அமைக்க கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. இதையடுத்து உடனே இதை நிரந்தரமாக்க.உத்தரவிடப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடந்து வந்தது. மொத்தம் 200 மீட்டர் தூரத்திற்கு இந்த பாதை நிரந்தரமாக அமைக்க பணிகள் நடந்தது. இந்த geosynthetic மெட்டீரியல் பாதை அமைக்க 30 லட்சம் மட்டுமே செலவாகும். ஆனால் மர பாதையில்தான் எளிதாக பயணிக்க முடியும். மழையிலும் எதுவும் ஆகாது. மர பாதை அமைக்க 2.5 கோடி ரூபாய் செலவு ஆகும். இருந்தாலும் மரப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த பாதை மாற்றுத்திறனாளிகளுக்கு திறக்கப்பட்டது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த நிலையில்தான் பொதுமக்கள் பலரும் இதை பயன்படுத்தி வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் வீல்சேரில் செல்ல வேண்டிய பாதையில் இவர்கள் சென்று வருகின்றனர். இது கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. மக்கள் பலர் செல்வதால் இந்த பாதை சேதம் அடையும் வாய்ப்பு கூட உள்ளது. ஒரே நேரத்தில் மக்கள் பலர் விதிகளை மதிக்காமல், இப்படி செல்கின்றனர். மணலில் செல்ல விருப்பம் இன்றி மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டப்பட்ட மர பாதையில் இவர்கள் செல்வது கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

 முதல்வர்ஸ்டாலின்

முதல்வர்ஸ்டாலின்

முன்னதாக முதல்வர் ஸ்டாலின், எத்தனை முறை சென்றாலும் சலிக்காதது கடல் என்பார்கள். அந்தக் கடலலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் தற்காலிகப் பாதையினை ஏற்படுத்தியுள்ளோம்; விரைவில் நிரந்தரம் ஆக்குவோம். சிறிய பணிதான் இது; பெரிய மாற்றத்துக்குத் தொடக்கமும் கூட, என்று குறிப்பிட்டு இருந்தார். அதாவது மெரினாவில் அவ்வப்போது தற்காலிகமாக அமைக்கப்படும் இந்த பாதை விரைவில் நிரந்தரம் ஆக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். அவர் மிகவும் விருப்பப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்காக இந்த வசதியை ஏற்படுத்திக்கொடுத்த நிலையில் அதை மக்கள் எல்லோரும் பயன்படுத்துவது கடும் விமர்சனங்களை கொண்டு வந்துள்ளது.

English summary
People misusing the wooden path in marina constructed by CM M K Stalin for differently abled .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X