“வெள்ள பயம் வேண்டாம்!” குஷியான சென்னை மக்கள்.. ஸ்டாலின் ப்ளான் சக்சஸ்!
சென்னை: வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது. கூடவே பெருநகர சென்னை மாநகராட்சி கழிவுநீர் கால்வாய்களைச் சரிசெய்யும் மராமத்து பணிகளையும் மின்னல் வேகத்தில் செய்து வருகிறது.
கடந்த ஆண்டு கர்நாடகாவில் அதிக அளவில் மழைபெய்தபோது, அங்குள்ளவர்கள் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த மாதிரி ஒரு முதல்வர் எங்களுக்குக் கிடைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டு ட்விட்டரில் கருத்து போட்டார்கள். அது பிறகு ட்ரெண்ட்டிங் ஆனது.

அந்தளவுக்குக் கடந்த மழையின்போது சென்னையில் ஒருசொட்டு நீர் தேங்கவில்லை. ஆனால் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கொளத்தூரில் ஒரு அடி தண்ணீரில் படகு சவாரி செய்தார். அரசியல் லாபத்திற்காக அவர் செய்த செயல் அதே ட்விட்டரில் நகைச்சுவையாக மாறியது.
கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை மாநகரமே இரவோடு இரவாக செம்பரம்பாக்கம் ஏரி நீரால் மூழ்கியது. அப்படிக் கிடந்த சென்னை அரசு நிர்வாகத்தை ஸ்டாலின் பம்பரமாகச் சுழலவைத்தார். சுறுசுறுப்பாக இயங்க வைத்தார்.

வழக்கமாக மழைநீர் தேங்கும் தி.நகர், கே.கே நகர், வேளச்சேரி, ராயபுரம், மந்தைவெளி, வியாசர்பாடி எனப் பாரபட்சமில்லாமல் மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது. ஏதோ போயஸ் கார்டனில் மட்டும் வெள்ளம் வராமல் பார்த்துக்கொள்ளவில்லை அதிகாரிகள். சென்னையில் அனைத்து இடங்களையும் சரி சமமாக நீர் தேங்காமல் பார்த்துக் கொண்டனர்.
இதற்கே கடந்த ஆண்டு லேசான மழையில்லை. ஒரே இரவில் 3 மடங்கு மழைக் கொட்டி தீர்த்தது. அதையே மிகச் சிறப்பாகக் கையாண்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அந்த அனுபவம் கொடுத்த தைரியத்தில் இந்த ஆண்டு மழையைச் சமாளிக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்து அதிகாரிகளைத் தயார்நிலையில் வைத்துள்ளார்.
இந்த மழையைச் சமாளிக்க 2,000 மெட்ரோ வாட்டர் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்றும் குடிநீருடன் கழிவுநீர் கலக்காதவாறு பணிகள் மேற்கொள்ள ரூ1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்து விட்டன என்றும் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி அளித்துள்ளார்.

அதற்கு எல்லாம் பலபடி மேலே சென்று முதலமைச்சர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து நம்பிக்கை தரும் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், "சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. தி.மு க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம்!
தூர்வாருதல், புதிதாக 876 கி.மீ.க்கு மழைநீர் வடிகால் அமைத்தது உள்ளிட்ட நமது அரசின் செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் பெருமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பெருநகர மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் களத்தில் மக்களுக்குத் துணை நின்று பணியாற்றிடவும்.
மக்களுக்குச் சிறு இன்னல்கூட ஏற்படாமல் தடுக்க #DravidianModel அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திடுவோம்" என்று கூறியுள்ளார்.
சென்னையில் இரண்டு கட்டங்களாக மழைநீர் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 6720 இடங்களில் 1359.79 கி.மீட்டர் நீளமுள்ள மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் கடந்த ஜூலை மாதமே தொடங்கப்பட்டு, பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முடிக்கத் திட்டமிடப்பட்டது.

தெளிவாகச் சொன்னால், பெருநகர சென்னை மாநகராட்சியில் 53.42கிமீட்டர் நீளத்திற்கு 33 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நீர்வழிக் கால்வாய்களில் மிதக்கும் ஆகாயத்தாமரைகளையும், சேறு, சகதி மற்றும் வண்டல்களை நவீன இயந்திரங்களைக் கொண்டு அகற்றியுள்ளனர். 90% மேலான பணிகள் கடந்த ஜூலை மாதமே முடிவடைந்துவிட்டன என்று நகராட்சி நிர்வாகத்து அமைச்சர் கே என் நேரு விளக்கம் அளித்திருந்தார்.
இது மட்டுமில்லாமல் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகப் பெருநகர மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் 15 மண்டலங்களுக்கு இந்திய ஆட்சி குடிமைப்பணி அலுவலகர்கள் (ஐஏஎஸ்) கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது அழுத்திச் சொல்ல வேண்டிய தகவல்.

இந்த உயர் அதிகாரிகளைத் தாண்டி மாநகராட்சி சார்பில் 23 ஆயிரம் பணியாற்றி வருகின்றனர். சென்னையில் மட்டும் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்வதற்காக 169 மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
மனித ஆற்றலைக் கடந்து ஜேசிபி, லாரி, மர அறுவை இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள், கனரக வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் பேட்டரியில் இயங்கும் 2,619 வாகன ஓட்டுநர்கள், தயார்நிலையில் 1019 வாகனங்கள், 3,908 துப்புரவுப் பணியாளர்கள், 318 ஓட்டுநர்கள், 922 இதர ஊழியர்களைக் கொண்ட ஒட்டுமொத்தக் குழுவும் சென்னையைத் தூய்மையாக, பசுமையாக மாற்றுவதற்கான பணியாற்றி வருகின்றனர் என்று பெருநகர சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

இவ்வளவு ஏற்பாடுகளையும் கடந்து, ஏதேனும் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தால், 24 மணிநேரமும் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறைக்குப் பொதுமக்களுக்கு 1913 என்ற இலவச எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தங்களது புகாரைத் தெரிவிக்க ஏற்பாடு செய்துதரப்பட்டுள்ளது.
இந்த மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சென்னையில் முடிக்கப்படாமல் உள்ள கழிவுநீர் கால்வாய் பணிகளை ஒரே வாரத்திற்கு முடிக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதைச் செயல்படுத்தத் தவறினால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் ஒன்றும். அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆகவே, சென்னை முழுவதும் இரவு பகலாகச் சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்துவருகின்றன.
திரு.வி.க.
நகர் மண்டலம், டிமலஸ் சாலையில் உள்ள கால்வாயில் நீர் வெளியேற்றும் நிலையத்தின் பணிகளில் இந்த மழையையும் பொருட்படுத்தாமல் நேரடியாகக் களத்தில் இறங்கி அமைச்சர் கே என் நேரு செய்து வருகிறார். அதற்கான படங்களை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார்.

இவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் உள்ளிட்ட பல அதிகாரிகள் 24 X 7 மணிநேரமும் இயங்கி வருகிறார்கள்.
கடந்த சில வாரங்களாக மழைக்கால நோய்களைத் தடுப்பதற்குச் சென்னை மாநகராட்சி சார்பில் நோய்த் தடுப்பு முகாம்கள் போடப்பட்டு, அவை தீவிரமாக இயங்கி வருகின்றன.
சென்னையில் உள்ள அழகப்பா சாலையில் முன்பு எப்படி கழிவுநீர் தேங்கிக் கிடந்தது. இந்த மழைக்கு அந்தப் பகுதி எப்படிப் பளபளக்கிறது என்று கிரேட்டர் சென்னை காப்ரேஷன் ட்விட்டர் பக்கத்தில் தெளிவாக ஒரு படத்தைப் போட்டு விளக்கி உள்ளனர். பார்க்கவே அந்தச் சாலை அவ்வளவு தூய்மையாக உள்ளது.

அதைப்போன்று Woods Road பகுதியில் கழுவுநீர் அகற்றும் ஒரு ராட்சத வானம் எவ்வளவு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது என்பதையும் படம்போட்டு விளக்கி உள்ளனர்.
மழைக்காலம் வந்தாலே வெள்ளத்தால் நிரம்பி வழியும் சைதாப்பேட்டை அரங்கநாதன் சப்வே இப்போது ஒருசொட்டு தண்ணீர் தேங்காமல் மழமழ வென்று மாறி இருக்கிறது. இதே பகுதியின் அருகேதான் கிண்டி உள்ளது. அந்தச் சாலையில் துளி மழைநீர் தேங்கவில்லை என்பதைப் பல தொலைக்காட்சிகள் லைவ் ஆகப் படம் பிடித்துக் காட்டி வருகின்றன.

இப்போது புரிகிறதா? எந்தத் தைரியத்தில் முதல்வர் ஸ்டாலின், 'சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது' என்று குறிப்பிட்டிருக்கிறார் என்று.
That is called dravidian model

-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications