சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகனின் விடுதலை... முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி... பேச வார்த்தைகள் இல்லை - மகிழ்ச்சியில் அற்புதம்மாள்

31 ஆண்டுகள் வலியும் வேதனையும் சந்தித்துள்ளோம் அந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று அற்புதம்மாள் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மகனின் விடுதலையால் மகிழ்ச்சியில் இருக்கிறார் அற்புதம்மாள். 31 ஆண்டுகால சிறை தண்டனையில் இருந்து விடுதலை செய்துள்ளது உச்சநீதிமன்றம். வலியும் வேதனையும் பட்டிருக்கிறோம். இந்த விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார். நன்றி என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் இப்போதைக்கு வார்த்தைகள் வரவில்லை என்று கூறியுள்ளார் அற்புதம்மாள்.

Recommended Video

    Perarivalan Mother Speech | பேரறிவாளன் தாய் Arputhammal பேட்டி | Oneindia Tamil

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளன் விடுதலை என்ற தீர்ப்பை அடுத்து தாய் அற்புதம்மாள், சகோதரி உள்ளிட்டோர் ஆனந்த கண்ணீரில் திளைத்துள்ளனர். தாய், சகோதரி உள்ளிட்டோர் பேரறிவாளனுக்கு இனிப்புகளை ஊட்டி நெகிழ்ச்சி அடைந்தனர்.

    Perarivalan release: Thanks to CMStalin no words to speak Says Arputhammal

    தீர்ப்பு குறித்து பேசிய தாயார் அற்புதம்மாள், 'பேரறிவாளன் விடுதலை: இந்த தீர்ப்பு எப்பொழுதோ கிடைத்திருக்க வேண்டும், இது கால தாமதம்தான்; ஆனால் மகிழ்ச்சி.மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை,'என்றார்.

    எங்கள் குடும்பத்துக்கு இன்றுதான் மிக மகிழ்ச்சியான நாள் என்று பேரறிவாளனின் உறவினர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பேரறிவாளன் தீர்ப்பை அடுத்து, அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் உறவினர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

    செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள் இத்தனை ஆண்டு காலம் செய்தியாளர்களிடம் பேசாமல் தவிர்ததது ஏன் என்று கூறினார். 31 ஆண்டுகாலம் வலியோடும் வேதனையோடும் போராடியிருக்கிறோம். 31 ஆண்டுகாலம் சிறையிலேயே கழித்து விட்டார். மகனின் இளமைக்காலம் முழுவதும் சிறையில் கடந்து விட்டது.

    மகனின் விடுதலைக்காக எத்தனையோ பேர் குரல் கொடுத்திருக்கிறார்கள் அனைவருக்கும் நன்றி. முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி. நன்றி என்ற வார்த்தையைத் தவிர இப்போதைக்கு வேறு எதுவும் சொல்ல வார்த்தைகள் இல்லை என்று கூறியுள்ளார்.

    தூக்கு தண்டனை கிடைத்து எமனிடம் சென்ற மகனின் உயிரை போரடி மீட்ட அற்புதம்மான் இன்றைக்கு மகன் விடுதலையானதால் மகிழ்ச்சியில் பேச வார்த்தைகள் இன்றி தவிக்கிறார். மகனின் விடுதலைக்காக கடந்த 31 ஆண்டுகாலம் நிறைய போராட்டங்களை கடந்து செய்தியாளர்களிடம் நிறைய பேசியிருக்கிறார் அற்புதம்மாள்.

    English summary
    Arputhammal is happy with her son's release. The Supreme Court has acquitted him of 31 years in prison. We are in pain and suffering. He thanked everyone who voiced their support for this release. Arputhammal has said that there are no words for anything other than the word 'thank you' for now.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X