பெரியார் சிலை சர்ச்சை.. நீங்க சிறையிலேயே இருங்க! கனல் கண்ணன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
சென்னை: பெரியார் சிலை தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனின் ஜாமீன் மனுவை சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Recommended Video
திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து முன்னணி அமைப்பில் செயல்பட்டு வருகிறார். இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளராக உள்ளார்.
இந்நிலையில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் சென்னை மதுரவாயலில் நடந்த நிகழ்ச்சியில் கனல் கண்ணன் பங்கேற்று பேசினார்.

சர்ச்சை பேச்சு
அப்போது அவர் பெரியார் சிலை பற்றி ய சில விஷயங்களை குறிப்பிட்டார். அதாவது, ‛‛ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரேயுள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும். அன்றைய தினம் தான் இந்துக்களின் எழுச்சி தினமாக இருக்கும்'' என பேசினார். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் சர்ச்சையை கிளப்பியது.

வழக்குப்பதிவு
கனல் கண்ணனை கைது செய்ய வே்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பபேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கலகம் செய்ய தூண்டுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவர் எப்போது வேண்டுமானலும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது.

புதுச்சேரியில் கைது
இதற்கிடையே தான் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கனல் கண்ணனின் முன்ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 11ம் தேதி தள்ளுபடி செய்தது. இதற்கிடையே தான் கனல் கண்ணனை கடந்த 15ம் தேதி புதுச்சேரில் போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜாமீன் மனு தள்ளுபடி
இந்நிலையில் தான் ஜாமீன் கோரி கனல் கண்ணன் தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக் வந்தது. இதையடுத்து மஅவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கனல் கண்ணன் தொடர்ச்சியாக சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications