சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

15 நாட்களாக ஒரு அடி கூட நகராத.. பெட்ரோல், டீசல் விலை.. இன்றைய விலை என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கடந்த 15 நாட்களாக பெட்ரோல் டீசல், விலை மாற்றமின்றி செல்கிறது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 92.43 ரூபாய், டீசல் லிட்டர் 85.75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை கடந்த 2017-ம் ஆண்டு முதல் தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன.

Petrol and diesel prices in Chennai have remained unchanged for the last 15 days

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வந்தது. ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வந்ததால் வாகன ஓட்டிகள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அதன்பின்னர் தமிழகம், புதுவை, கேரளா உள்பட 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. இதற்கு மாறாக பெட்ரோல், டீசல் விலை சில காசுகள் குறையத்தான் செய்தது. தேர்தல் நடப்பதால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கவில்லை என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துக்கள் உலா வந்தன.

சென்னை பகுதியில் ஒரு தொகுதியையும் அதிமுகவுக்கு விட்டுத் தராத திமுக.. சி வோட்டர் கணிப்பு!சென்னை பகுதியில் ஒரு தொகுதியையும் அதிமுகவுக்கு விட்டுத் தராத திமுக.. சி வோட்டர் கணிப்பு!

பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் விலையை உயர்த்தி வருகின்றன. சென்னையில் கடந்த 15 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்றும் அதே விலையில் நீடிக்கிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 92.43 ரூபாய், டீசல் லிட்டர் 85.75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

English summary
Petrol and diesel prices in Chennai have remained unchanged for the last 15 days. Today, a liter of petrol was sold at Rs 92.43 and a liter of diesel at Rs 85.75
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X