சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

88 ஆவது நாள் இன்று.. பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமுண்டா? சென்னை நிலவரம் என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமில்லாமல் 88-ஆவது நாளாக அதே விலையில் நீடித்து வருகிறது.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டில் பெட்ரோல் டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன.

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 106.66, ஒரு லிட்டர் டீசல் ரூ 102.59 க்கு விற்பனையானது. இதுவே பெட்ரோல் டீசல் விற்பனையில் அதிகபட்ச விலையாக இருந்தது.

87 ஆவது நாள் இன்று.. பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமுண்டா? சென்னை நிலவரம் என்ன? 87 ஆவது நாள் இன்று.. பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமுண்டா? சென்னை நிலவரம் என்ன?

கலால் வரி

கலால் வரி

அன்றைய தினம் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனால் நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5 ம், டீசல் விலை ரூ 10 ம் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43 க்கும் விற்பனையானது.

5 மாநில தேர்தல்

5 மாநில தேர்தல்

இதையடுத்து உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களால் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தேர்தல் முடிந்தன. ஆனாலும் விலையேற்றம் இல்லை. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போரிட்டு வருகிறது.

தொடர் விலையேற்றம்

தொடர் விலையேற்றம்

இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது. எனினும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கப்படவில்லை. இதையடுத்து 137 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் 22 ஆம் தேதி பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து இந்த விலையேற்றம் இருந்து வருகிறது.

1 மாதத்திற்கு மேல்

1 மாதத்திற்கு மேல்

இதனால் கடந்த 1 மாதத்திற்கு மேலாக பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமில்லாமல் விற்பனையானது. அந்த வகையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 110.85 க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ 100.94 க்கும் விற்பனையானது. இந்த நிலையில் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும் டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது. இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ7 குறைக்கப்பட்டது.

பெட்ரோல் டீசல் விலை 88ஆவது நாள்

பெட்ரோல் டீசல் விலை 88ஆவது நாள்

இதனால் மே 22 ஆம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது. அந்த வகையில் தொடர்ந்து 88ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 94.24- க்கும் விற்பனையாகி வருகிறது. டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 96.35 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 89.52 க்கு விற்கப்படுகிறது. பெங்களூரில் பெட்ரோல் விலை லிட்டர் 101.94 ரூபாயை தாண்டி உள்ளது. டீசல் விலை 87.89 ரூபாயை தாண்டி உள்ளது.

English summary
Petrol diesel price: There is no change in petrol diesel price for 88th day. Do you know the price of both in Chennai?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X