பெட்ரோல் விலையை ரூ.35 ஆக குறைப்போம்...இப்படி செய்தால்... அண்ணாமலை சொல்லும் வழிமுறை இதுதான்?
மாநில அரசு வரியை குறைக்க வேண்டும். திமுகவுக்கு ஆண்டவன் நல்ல புத்தியை கொடுத்து பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர முன்வரவேண்டும் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை: பெட்ரோல் விலை 35ரூபாய் குறைக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியள்ளார். பெட்ரோல், டீசலை ஏன் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரக்கூடாது என நிதியமைச்சர் சொல்கிறார் என புரியவில்லை என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது.
Recommended Video
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100ஐயும், டீசல் ரூ.95ஐயும் எட்டியது. மிக அதிகபட்சமாக மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108க்கு அதிகமாக விற்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெட்ரோல் ரூ.103ஐ தொட்ட நிலையில், திமுக அரசு மாநிலத்திற்கான வரி வருவாயில் ரூ.3ஐ குறைத்து ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி நிதி நிலை அறிக்கையில் அறிவித்தது. இதனால், மாநிலம் முழுவதும் பெட்ரோல் விலை ரூ.103ல் இருந்து 100 ரூபாய்க்கு கீழ் விற்பனையானது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து 99 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு லிட்டர் டீசலின் விலை 28 காசுகள் அதிகரித்து 95 ரூபாய் 2 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரியலூர், கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகை, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய பெரும்பாலான நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கு மேல் விற்கப்படுகிறது.
இதனிடையே விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் வருகின்ற 6மற்றும் 9ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம் அருகிலுள்ள அன்னியூர் பகுதியில் பிரச்சாரம் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலையிடம், கூட்டத்தில் இருந்த பொது மக்களில் ஒருவர் பெட்ரோல் விலையை எப்போது குறைப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, பாஜக கட்சி பெட்ரோல் விலையை 35 ரூபாய் குறைக்கும். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்து விலையை குறைப்போம் என்றார்.
தமிழக நிதி அமைச்சர் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் வளைகாப்புக்கு சென்றுவிட்டார். இது தான் திமுகவின் அவலமான நிலை. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பாஜக அரசு தயாராக உள்ளது. பெட்ரோல், டீசலை ஏன் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரக்கூடாது என நிதியமைச்சர் சொல்கிறார் என புரியவில்லை. இதனை தமிழக அரசு விளக்க வேண்டும்.
சத்தியம் செய்கிறேன் பாஜக பெட்ரோல் விலையை குறைப்பதற்காக தொடர்ந்து போராடுவோம் என்றார். மாநில அரசு வரியை குறைக்க வேண்டும். திமுகவுக்கு ஆண்டவன் நல்ல புத்தியை கொடுத்து பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர முன்வரவேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பொது மக்கள் கேள்விகளை எழுப்பியவாரு இருந்ததால் கூட்டத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு அண்ணாமலை கிளம்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications