PF திட்டத்தில் புதிய வசதி.. கணக்கு இன்னும் பதிவு செய்யலை? EPFO தந்த 6 மாத அபராதமில்லா சூப்பர் சான்ஸ்
சென்னை: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு எனப்படும் EPFO ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இத்திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம், சந்தாதாரர்கள் பதிவு செய்து கொள்வதற்கான சூப்பர் திட்டத்தை நிறுவனம் துவங்கியிருக்கிறது.. இத்திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள், எந்தவித சிரமமுமின்றி எளிதாக தங்களது தொழிலாளர்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
இதுவரை PF கணக்கில் பதிவு செய்யப்படாமல் இருந்த தகுதியுள்ள ஊழியர்களை, நிறுவனங்கள் இப்போது பதிவு செய்யலாம். இதற்காக அரசு 6 மாத சிறப்பு கால அவகாசமும் கொடுத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தினால், நிறுவனங்களுக்கு பெரிய அபராதம் அல்லது சட்ட பிரச்சனை எதுவும் வராது.

இந்த சிறப்பு பதிவு காலம் நவம்பர் 2025 முதல் 6 மாதங்கள் இருக்கும். இந்த காலத்தில், 2017 ஜூலை 1 முதல் 2025 அக்டோபர் 31 வரை வேலை செய்தும் PF-ல் சேர்க்கப்படாத ஊழியர்களை பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது... இதற்கு முன்பு தவறு நடந்திருந்தாலும், அதற்காக இப்போது அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்காது என்பதும் தெளிவாக தெரிவித்துள்ளது.
PF தொகை - சேமிப்பு பணம்
இந்த திட்டத்தின் நோக்கம், PF இல்லாமல் இருந்த ஊழியர்களுக்கு எதிர்கால பாதுகாப்பு வழங்குவதுதான். PF என்பது வேலை செய்யும் காலத்தில் சேமிக்கப்படும் பணமாகும்.. இந்த பணம், ஓய்வு பெற்ற பிறகு மிகவும் உதவியாக இருக்கும்.. ஆனால் பல சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் PF இல்லாமல் இருந்தனர். இப்போது அந்த குறையை சரி செய்ய இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நிறுவனங்களுக்கு பெரிய சலுகை வழங்கப்பட்டுள்ளது. முன்பு ஊழியர்களின் PF தொகையை பிடிக்காமல் இருந்திருந்தாலும், இப்போது நிறுவனங்கள் தங்களின் பங்கு PF தொகையை மட்டும் செலுத்தினால் போதும்.
பலன்கள், பயன்கள், நன்மைகள் ஏராளம்
அதனுடன் குறைந்த வட்டி, அலுவலக செலவு, அதிகபட்சம் ரூ.100 மட்டும் அபராதமாக செலுத்த வேண்டும். ஆயிரக்கணக்கான ரூபாய் அபராதம் எதுவும் இல்லை. இதனால் நிறுவனங்கள் எந்த பயமுமில்லாமல் ஊழியர்களை பதிவு செய்ய முடியும்.
இந்த பதிவு செய்யப்பட்டதும், ஊழியர்களுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்... குறிப்பாக PF கணக்கு தொடங்கப்படும். எதிர்காலத்திற்கு சேமிப்பு உருவாகும்.. குறிப்பிட்ட காலம் PF-ல் பணம் செலுத்திய பிறகு, பென்ஷன் பெறும் வாய்ப்பும் கிடைக்கும்.... வேலை செய்யும் போது மரணம் ஏற்பட்டால், குடும்பத்தினருக்கு காப்பீட்டு உதவியும் வழங்கப்படும். இதுவரை இந்த பாதுகாப்புகள் கிடைக்காமல் இருந்த பலருக்கு இது பெரிய உதவியாக இருக்கும்.
மிஸ் செய்யக்கூடாது
இந்த திட்டம் ஒப்பந்த ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயன் தரும்... இவர்களையும் PF திட்டத்தின் கீழ் கொண்டு வர EPFO அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் தகவல் பரப்பும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மொத்தத்தில், இந்த 6 மாத PF பதிவு வாய்ப்பு, ஊழியர்களுக்கு எதிர்கால நிம்மதியை தரும் ஒரு சூப்பர் திட்டமாகும். நிறுவனங்கள் இந்த வாய்ப்பை மிஸ் செய்யாமல் விடாமல் பயன்படுத்தினால், பல ஆயிரம் ஊழியர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்கும்..!!!
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications