மனித குலத்தின் முதுகெலும்பு! பூமிக்கு வெளியே முதல்முறை கண்டறியப்பட்ட அந்த பொருள்! விஞ்ஞானிகள் ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பூமியில் மட்டும் அதிகமாக காணப்படும் ஒரு பொருள்.. பூமிக்கு வெளியே முதல்முறை கண்டறியப்பட்டுள்ளது. சனி கிரகத்தின் நிலவுகளில் ஒன்றில் முதல்முறையாக அந்த பொருள் கண்டறியப்பட்டு உள்ளது.

மனித சமூகம் கடந்த சில நூற்றாண்டுகளாகவே வேற்றுகிரக வாசிகள் குறித்த தீவிர ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. மனிதன் நிலவில் கால் வைத்தது தொடங்கி தற்போது செவ்வாய் கிரக ஆராய்ச்சிகள், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வரை அனைத்துமே வேற்றுகிரக வாசிகளை தேடும் மனித ஆராய்ச்சியின் ஒரு அங்கம்தான்.

Phosphate, a major building block of life found on Saturn’s moon Enceladus

பரந்து விரிந்த விண்வெளியில் எங்காவது ஒரு மூலையில் ஒரு சின்ன உயிரினம் இருந்துவிடாதா என்று உலகின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எல்லோரும் தொடர் ஆய்வுகளை செய்து வந்தும் இதுவரை அவர்களால் எந்த ஒரு ஏலியனையும் அதிகாரபூர்வமாக கண்டுபிடிக்க முடியவில்லை.

கண்ணுக்கே தெரியாத அணுவை பிளந்து ஆயுதம் உருவாக்கியது தொடங்கிய கடவுள் துகளை வைத்து ஹிக்சும் - போஸும் ஆட்டம் போட்டது வரை மனித குலம் ஏகப்பட்ட கண்டுபிடிப்புகளை, சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு முறையும் நிகழ்த்தப்படும் புதிய கண்டுபிடிப்புகள்.. நாம் இதுவரை கண்டுபிடித்தது எல்லாம் ஒன்றுமே இல்லை என்று முகத்தில் அறைந்தார் போல சொல்லிவிடுகின்றன.

இது போன்ற பிரபஞ்சத்தில் இருக்கும் பல்வேறு தெரியாத கிரகங்களை, வேறு பால்வெளியில் இருக்கும் கிரகங்களை , நட்சத்திரங்களை ஆராய்வதற்காகவே James Webb என்ற தொலைநோக்கியை நாசா மற்றும் ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி விண்ணிற்கு அனுப்பி உள்ளது.

ஜேம்ஸ் வெப் மட்டுமின்றி பல்வேறு ஆராய்ச்சி விண்கலங்கள் விண்வெளியில் உள்ளன. அந்த வகையில் தற்போது : பூமியில் மட்டும் அதிகமாக காணப்படும் ஒரு பொருள்.. பூமிக்கு வெளியே முதல்முறை கண்டறியப்பட்டுள்ளது. சனி கிரகத்தின் நிலவுகளில் ஒன்றில் முதல்முறையாக அந்த பொருள் கண்டறியப்பட்டு உள்ளது.

என்ன பொருள்? : பூமியில் மட்டுமே அதிகம் காணப்படும் பொருள் பாஸ்பரஸ். இந்த பாஸ்பரஸ் பாஸ்பேட் வடிவில் கண்டுபிடிக்கப்படுவது மிக மிக அரிதானது. இந்த பாஸ்பேட்தான் நமது மனித டிஎன்ஏவின் முதுகெலும்பு என்று கூட கூறலாம்.

நாசாவின் Cassini ஸ்பேஸ் மிஷன், பெர்லின் பல்கலைக்கழகம் இணைந்து தற்போது இந்த பாஸ்பேட்டை சனி கிரகத்தின் நிலவில் கண்டுபிடித்து உள்ளன. சனி கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான Enceladus கிரகத்தில் இந்த பாஸ்பேட் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அங்கே உறைந்து இருக்கும் கடலில் இந்த பாஸ்பேட் கண்டறியப்பட்டு உள்ளது. இதுதான் டிஎன்ஏவின் முதுகெலும்பை அதாவது அடிப்படை கட்டமைப்பை உருவாக்குகிறது மற்றும் செல் சவ்வுகள் மற்றும் எலும்புகளின் ஒரு பகுதியையும் இதுதான் உருவாக்குகிறது. ஜூன் 14 அன்று வெளியிடப்பட்ட இந்த ஆய்வு கட்டுரையின் மூலம் முதல் முத்தலாக் பூமிக்கு வெளியே பாஸ்பரஸ் கண்டறியப்பட்டு உள்ளது.

அதிலும் பூமியில் இருப்பதை விட அங்கு 1000 மடங்கு அதிகம் பாஸ்பரஸ் இருக்கும் என்று கண்டறிந்து உள்ளனர். இதனால் அந்த நிலவு வாழ தகுதி கொண்டதாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. நாசாவின் காசினி மிஷன் 2004 முதல் 2017 வரை சனி, அதன் வளையங்கள் மற்றும் அதன் நிலவுகளை ஆய்வு செய்தது.

தொடர்ந்து அங்கே ஆய்வு செய்து வரும் காசினி மிஷன்தான் இந்த பாஸ்பரஸை கண்டுபிடித்துள்ளது. பூமியில் மட்டும் அதிகமாக காணப்படும் ஒரு பொருள்.. பூமிக்கு வெளியே முதல்முறை கண்டறியப்பட்டுள்ளது விஞ்ஞானிகள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+