ராஜ பகதூர் மாதிரி ஜம்முனு.. கைலாசாவில் கலாசலா! ஏழுமலையான் கெட்டப்பில் நித்தியானந்தா! மனுஷன் வாழுறாரு
சென்னை : பாலியல் வழக்குகளில் சிக்கி சின்னாபின்னமாகி தலைமறைவாக இருந்தாலும் கைலாசா என்ற கற்பனை தேசத்தில் வாழ்ந்து வருவதாக கூறும் சாமியார் நித்தியானந்தா தசாவதாரம் கமல்ஹாசன் போல பல்வேறு கெட்டப்புகளை போட்டு அவ்வப்போது ஆன்லைனில் அப்டேட் செய்து வருகிறார். அந்த வகையில் லேட்டஸ்ட் வரவாக அக்ஷய திருதியை முன்னிட்டு ஏழுமலையான் கெட்டப்பில் நித்தியானந்தா இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர்களை விட எப்போதும் ஆன்லைனில் பேசு பொருளாக இருப்பவர் நித்தியானந்தா தான். தன்னைத் தானே கடவுள் என சொல்லிக் கொள்ளும் நித்தியானந்தா குறித்த சர்ச்சைகளுக்கு எப்போதுமே பஞ்சம் ஏற்பட்டதே கிடையாது.

கதவை திற காற்று வரட்டும் என கட்டுறை எழுதிக் கொண்டிருந்த அவர் நடிகை ஒருவர் உடனான வீடியோவால் சிக்கி சின்னா பின்னமானார். அதற்குப் பிறகுதான் நித்தியானந்தாவின் புகழ் உலகெங்கும் பரவத் தொடங்கியது.
நித்தியானந்தா: பெங்களூரு அருகே இருக்கும் பிடதியில் ஆசிரமம் தொடங்கிய நித்தியானந்தா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் வாரிசாக அறிவிக்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். அந்த பிரச்சனை ஓய்வதற்குள் பாலியல் வன்கொடுமை பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் சிக்கினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவருக்கு எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து 2019-ல் இந்தியாவை விட்டு தப்பிச் சென்றார். அன்றிலிருந்து இன்றுவரை நித்தியானந்தா என்ன ஆனார் என்று தெரியவில்லை.
கைலாசா: இந்த நிலையில் தான் 2019ஆம் ஆண்டு கடைசி பகுதிகளில் இந்துக்களுக்கென கைலாச என்ற ஒரு தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்ததோடு அது எல்லைகள் இல்லாத தேசம் கைலாசாவில் யார் வேண்டுமானாலும் குடிமக்களாக இணைந்து கொள்ளலாம் என பல்வேறு அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டார். தொடர்ந்து நித்தியானந்தா உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் அவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்ததாகவும் உடலை சுத்திகரித்ததாக கூறி பதற்றத்தை பற்ற வைத்து மீண்டும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தார்.

எங்கே இருக்கிறார்: இந்த நிலையில் தான் நித்தியானந்தாவின் கைலாசா எங்கே இருக்கிறது என பலரும் தேடி வருகின்றனர். அதே நேரத்தில் உலகில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் நாடுகளுடன் நகரங்கள் உடனும் கைலாசா ஒப்பந்தம் போட்டது. குறிப்பாக அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் இருக்கும் நெவார்க் நகரத்துடன் கைலாச சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்து கொண்டது பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் பல நகரங்களிடமும் கைலாச ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
ஏழுமலையான் கெட்டப்: இந்த நிலையில் தான் மீண்டும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறார் நித்தியானந்தா. தசாவதாரம் கமல் போல அவ்வப்போது சிவன் பைரவர் என பல்வேறு கெட்டப்புகளை போட்டு அசத்தி வரும் அவர் தற்போது ஏழுமலையான் கெட்டப் போட்டு இருக்கிறார். திருப்பதி வெங்கடாசலபதி சிலை இருப்பது போலவே மிகப்பெரிய நாமத்துடன் புன்னகை பொங்க நித்தியானந்தா காட்சியளிக்கும் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைலாகி வருகிறது.
-
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications