அதிமுக- பாஜக கூட்டணியில் உள்ளே வரும் புதிய கட்சி.. பியூஷ் கோயல் இன்று நடத்தும் முக்கியமான மீட்டிங்
சென்னை: பாஜக தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று தமிழகம் வருகிறார். கூட்டணியை இறுதி செய்யும் நடவடிக்கையில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், பியூஷ் கோயலின் தமிழக வருகை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தேமுதிக தலைவர்களை பியூஷ் கோயல் சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் அனைத்துக் கட்சிகளும் இறங்கியுள்ளன. திமுகவை பொறுத்தவரை அக்கூட்டணி நிலையாகவே இருக்கிறது. காங்கிரஸில் சில தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினாலும் பெரும்பாலும் சிக்கலின்றி இருக்கிறது.

மறுபுறம் அதிமுகவைப் பொறுத்தவரை கடந்தாண்டே அதிமுக- பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு இந்தக் கூட்டணியில் அன்புமணியின் பாமகவும் இணைந்த நிலையில், ஐஜேகே கட்சியும் இந்தக் கூட்டணியில் சமீபத்தில் தான் இணைந்தது. இன்னும் சில கட்சிகளைக் கூட்டணிக்குள் அழைத்து வந்து, கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் அதிமுக- பாஜக கூட்டணி இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாகவே இன்று பாஜக தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று தமிழகம் வருகிறார். அதிமுகவுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளை, பியூஷ் கோயல் கவனிப்பார் எனத் தெரிகிறது. தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தவரை சுமார் 40 முதல் 45 தொகுதிகள் வரை பாஜக கேட்பதாகத் தெரிகிறது. அதில் பாஜக 20 முதல் 25 தொகுதிகளில் போட்டியிடும். இதர கட்சிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுக்க பாஜக கேட்பதாகச் சொல்லப்படுகிறது.
பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டம் வரும் 23ம் தேதி மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் மேடை ஏற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகவே கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் பணிகளில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது.
இன்றைய தினம் பியூஷ் கோயல் தேமுதிக தலைவர்களைச் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தேமுதிக இதுவரை தங்கள் கூட்டணி நிலைப்பாட்டைப் பொதுவெளியில் அறிவிக்காத நிலையில், அவர்கள் பாஜக- அதிமுக கூட்டணியில் சேர வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. இதற்காகவே பியூஷ் கோயல் அக்கட்சித் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட அதிமுக கூட்டணியில் மிக விரைவில் ஒரு புதிய கட்சி இணையப் போவதாகச் சொல்லி இருந்தார். அது தேமுதிகவாக இருக்கலாம் என அப்போதே சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. பியூஷ் கோயலின் தமிழகம் வருகை நிச்சயம் தமிழக அரசியலில் முக்கியமானதாகவே இருக்கும்!
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications