பட்டினப்பிரவேசம்.. இந்த வருஷம் ஓகே.. ஆனால் அடுத்த வருஷம்.. சூசகமாக செக் வைக்கும் அமைச்சர் சேகர் பாபு
சென்னை: பட்டினப்பிரவேசம் இந்த ஆண்டு ஏற்படும் நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது வரும் காலங்களில் இதை தவிர்த்து மாற்று ஏற்பாடுகளை செய்யக்கோரி இந்து சமய அறநிலைத்துறை வேண்டுகோள் விடுத்திருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
பட்டணப் பிரவேசத்தில் தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. விசிக, திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆதினத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள் எதிர்த்தனர்.

பாஜக அதிமுக
பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்த முடிவை எதிர்த்தன. இது தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் தருமபுர ஆதீனத்தின் கோரிக்கையை ஏற்று இதற்கான தடையை நீக்கியது தமிழ்நாடு அரசு. இன்று தடையை திரும்ப பெறுவதாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி அறிவித்தார். வரும் 22ம் தேதி பட்டினப்பிரவேசம் நடைபெற உள்ளது.

பட்டினப்பிரவேசம்
இந்த நிலையில், முதல்வர் சந்திப்புக்கு பின்பு பட்டினப்பிரவேசம் இந்த ஆண்டு ஏற்படும் நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது வரும் காலங்களில் இதை தவிர்த்து மாற்று ஏற்பாடுகளை செய்யக்கோரி இந்து சமய அறநிலைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது என்றும் இது தொடர்பாக ஆதீனங்கள் கலந்து பேசி தெரிவிப்பதாக கூறியுள்ளனர் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த தாயைம்பட்டு கிராமத்தில் விஷ்ணு துர்க்கை மற்றும் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமர்சியாக நடைபெற்றது. யாகசாலையில் கலசங்கள் வைக்கப்பட்டு வேதமந்திரங்கள் ஓதி யாக குண்டங்கள் வளர்க்கப்பட்டன. இதன் முடிவில் பூர்ணாகுதி நடைபெற்று யாக கலசங்கள் கோவிலின் உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு கும்பாபிஷேக நீர் ஊற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் கலந்து கொண்டார்.. பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது,,

சேகர் பாபு
பட்டினபிரவேசத்திற்கு தமிழக முதல்வர் நேற்று முற்றுப்புள்ளி வைத்து விட்டார். ஆண்டாண்டு காலமாக நடைபெற்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து கால மாற்றத்திற்கு ஏற்ப பல நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இன்றைக்கு தருமபுர ஆதீனம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று அவர்கள் தமிழக முதல்வரை சந்தித்த நிலையில் அதற்குண்டான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நல்ல முடிவுகளை எடுப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

மாற்று ஏற்பாடு
மேலும் வரும் ஆண்டுகளில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு மாற்றாக வேறு ஒரு ஏற்பாடுகளை செய்யும்படி இந்து சமய அறநிலைத்துறை ஆணையம் சார்பாக ஆதீனத்திடம் வேண்டுகோள் வைக்கப் பட்டுள்ளது. அதற்கு இந்த ஆண்டு ஏற்பாடுகள் முடிந்து விட்டதால் இந்த நிகழ்வு முடிந்த பின்பு ஆதினங்கள் கலந்து பேசி தெரிவிப்பதாக கூறியுள்ளனர். நேற்று ஆதினங்கள் முதல்வரை சந்தித்ததால் பட்டினப் பிரவேசம் நடைபெறும் சூழல் நல்ல சூழல் ஏற்படும் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்தார். இதை தொடர்ந்தே பட்டணப் பிரவேசத்தில் தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications