Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஷ்யாவில் சென்னை டாக்டருக்கு சித்ரவதை.. உணவு இன்றி தாக்கும் அதிகாரிகள்.. மீட்டுதர கெஞ்சும் மனைவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வசித்து வரும் ஜெகதீஷ்வரன் உக்ரைனில் மருத்துவம் படித்தார். போர் காரணமாக அவர் ஊர் திரும்பினார். அதன்பிறகு ரஷ்யா சென்ற அவரை அங்குள்ள அதிகாரிகள் கைது செய்து அடித்து உதைத்து, உணவு, தண்ணீர் கொடுக்காமல் துன்புறுத்தி வருகின்றனர். ரஷ்ய மொழி தெரியும் என்பதால் போர் புரிய வேண்டும். இல்லாவிட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்று மிரட்டுகின்றனர். எப்படியாவது எனது கணவரை காப்பாற்றி தாருங்கள் என்று பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு அவரது மனைவி யாமினி கெஞ்சியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ்வரன். டாக்டர். இவர் உக்ரைனில் மருத்துவ மேல் படிப்பை படித்து வந்தார். கடந்த 2022ம் ஆண்டில் உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியது.

please-bring-my-husband-back-to-tamil-nadu-who-detention-in-russia-chennai-woman-request-pm-modi-an

அப்போது ஜெகதீஷ்வரன் நாடு திரும்பினார். இந்த சமயத்தில் ஜெகதீஸ்வரனுக்கு திருமணம் நடந்தது. யாமினி என்ற பெண்ணை கரம்பிடித்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இப்போது சென்னையில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெகதீஷ்வரன் தனது நண்பர் சேகருடன் ரஷ்யாவுக்கு சென்றார். ரஷ்யாவின் சோச்சி விமான நிலையத்தில் அவர்கள் இறங்கினார். அப்போது ரஷ்ய அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர். ஜெகதீஷ்வரன் உக்ரைனில் படித்த விஷயத்தை அறிந்து இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். இதில் சேகர் 10 நாளில் விடுவிக்கப்பட்டார். ஆனால் ஜெகதீஸ்வரர்ன 43 நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். இதையடுத்து இருவரும் நாடு திரும்ப முயன்றனர். அப்போது மீண்டும் ஜெகதீஷ்வரனை விமான நிலையத்தில் வைத்து அதே அதிகாரிகள் கைது செய்தனர்.

தற்போது ஜெகதீஷ்வரன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளார். அவரை மீட்க மனைவி யாமினி முயன்று வருகிறார். ஆனால் இதுவரை பலன் அளிக்கவில்லை. இதுதொடர்பாக சென்னை கலெக்டர் அலுவலகம், தலைமை செயலகம், மத்திய வெளியுறவுத்துறைக்கு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகமும் சரியான பதில் சொல்லவில்லை என்று மனைவி யாமினி கூறியுள்ளார். இதனால் ஜெகதீஷ்வரனின் மனைவி யாமினி மற்றும் குடும்பத்தினர் கலங்கிப்போய் உள்ளனர்.

இதுபற்றி யாமினி கூறுகையில்,‛‛எனது கணவரை ரஷ்யா அதிகாரிகள் துன்புறுத்தி வருகின்றனர். அவரை அடித்து தாக்குகின்றனர். உணவு, தண்ணீர் கொடுக்க மறுக்கின்றனர். எனது கணவருக்கு ரஷ்ய மொழி தெரியும். இதனால் ரஷ்ய ராணுவத்தில் இணைந்து உக்ரைன் மீது போர் புரிய வலியுறுத்துகின்றனர். ராணுவத்தில் சேர வேண்டும். இல்லாவிட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மிரட்டுகின்றனர். உணவு, தண்ணீர் கொடுக்காதாதல் அவரது சுகர் அளவு மோசமாக குறைந்தது. கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

மீண்டும் அவரை கைது செய்வதாக கூறுகின்றனர். நான் பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முதல்வர் ஸ்டாலினிடம் கெஞ்சி கேட்கிறேன். எப்படியாவது என் கணவரை மீட்டு தாருங்கள்'' என கோரிக்கை வைத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+