+2 பொதுத்தேர்வில் கால்குலேட்டர் எடுத்து செல்ல அனுமதி.. வந்த அசத்தல் அறிவிப்பு! எந்த தேர்வுக்கு அனுமதி தெரியுமா
சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் தேதிகளைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று அறிவித்தார். அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதால் தேர்வுகள் முன்கூட்டியே நடைபெறுகிறது. இதற்கிடையே இந்த முறை +2 மாணவர்கள் தேர்வுக்கு கால்குலேட்டர் எடுத்துச் செல்ல அனுமதி தரப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு நடைபெறும். அதன்படி இந்த கல்வியாண்டில் 10 மற்றும் +2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். பாட வாரியாக அட்டவணை, செய்முறைத் தேர்வு தேதிகள் மற்றும் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள தேதி ஆகியவை அறிவிக்கப்பட்டன.

கால்குலேட்டர்
அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டார். +2 பொதுத்தேர்வில் கால்குலேட்டர் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வந்த நிலையில், அதை ஏற்று கால்குலேட்டர் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.
யாருக்கு அனுமதி?
அதாவது 12ம் வகுப்பில் சயின்ஸ் இல்லாத பிரிவைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு அக்கவுண்ட்ஸ் எனப்படும் கணக்கு பதிவியல் பாடம் இருக்கிறது. இந்தத் தேர்வு எழுதுவோர் இத்தனை காலம் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி கிடையாது. இருப்பினும், அதற்கு அனுமதி தர வேண்டும் எனச் சொல்லி பல்வேறு தரப்பினரும் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அந்தக் கோரிக்கையை ஏற்றே கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை எழுதும் மாணவர்கள் சாதாரண கால்குலேட்டரை தேர்வுக்கு எடுத்துச் செல்லலாம். அதைப் பயன்படுத்தித் தேர்வுகளை எழுதலாம். நீண்ட காலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது அக்கவுண்ட்ஸ் மாணவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது.
பொது தேர்வு தேதிகள்
இந்தாண்டு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் பிப்ரவரி மாதம் 9ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 16ம் தேதி வரை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் செய்முறைத் தேர்வு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து +2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி ஆரம்பித்து மார்ச் 26ஆம் வரை நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். மாநிலம் முழுக்க 8.07 லட்சம் மாணவ மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதுகிறார்கள்.
10ம் வகுப்பு மாணவர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்குப் பிப்ரவரி 9 முதல் 16ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து மார்ச் 11 முதல் தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. அதேபோல 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8.70 லட்சம் மாணவ மாணவிகள் எழுதவுள்ளனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள்
மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் கணினி வழியில் தேர்வெழுதக் கடந்தாண்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கடந்தாண்டு இந்த முறையில் தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதையடுத்து இவ்வாண்டும் அதே முறையில் தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வெழுத வசதியாகக் கூடுதலாக ஒரு மணி நேரம் காலவகாசம் வழங்கப்பட உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications