குஷியில் விவசாயிகள்.. பிஎம் கிசான் யோஜனாவின் சரவெடி..அதுவும் பட்ஜெட்டுக்கு முன்பே: மத்திய அரசு மாஸ்
சென்னை: விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு அறிவிப்புகளையும், சலுகைகளையும் வெளியிட்டு வரும் மத்திய அரசு, விரைவில் இன்னொரு அறிவிப்பை வெளியிடலாம் என்கிறார்கள்.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிஎம் கிசான்) அதாவது பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் என்ற திட்டமானது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நேரடி பலன்கள்: இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசு சார்பாக விவசாயிகளுக்கு பண உதவி செய்யப்பட்டு வருகிறது... அந்தவகையில், ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகிறது. இதுவரை மொத்தம் 15 தவணைகளாக 2000 ரூபாய் பெற்றிருக்கிறார்கள்..
தற்போது 2024 வருடம் துவங்கியிருக்கும் நிலையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் தவணை மூன்றிலிருந்து 4ஆக உயர்த்தப்படக்கூடலாம் என்கிறார்கள்.. அதேபோல, வருடத்திற்கு இனி 6000 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக உயர்த்தலாம் என்றும் சொல்கிறார்கள். ஆனால், இதை பற்றி உறுதியான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.
விரைவில் எம்பி தேர்தல் வருவதால், அதையொட்டி அறிவிப்புகள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விவசாயிகளின் ஆதரவையும் மத்திய அரசு எளிதாகவே பெறக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.
தயாரிப்பு பணிகள்: இந்நிலையில், தற்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.. விரைவில் 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலாகிறது.. அதாவது வருகிற பிப்ரவரி மாதம், இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.. இதற்கான தயாரிப்பு பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.. இதன்காரணமாக, விவசாயிகளுக்கான அடுத்த தவணையை முன்கூட்டியே வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம்.
விவசாயிகளுக்கான உதவித்தொகை மற்றும் தவணை முறை குறித்த அறிவிப்புகள், பட்ஜெட் தாக்கலின்போது வெளியாகலாம் என்றும் செய்திகள் கசிந்தன.. ஒருவேளை, விவசாயிகளுக்கான உதவித்தொகையை அரசு 6000 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக உயர்த்தினால், சுமார் 22 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்றும் கணக்கிடப்பட்டது.
தமிழக விவசாயிகள்: இதுகுறித்தும் உறுதியாக தெரியவில்லை என்றாலும், இடைக்கால பட்ஜெட் தாக்கலாவதால், முன்கூட்டியே விவசாயிகளுக்கு தவணையை ஒதுக்க முடிவாகி உள்ளதாம். நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, 20.95 லட்சம் பேருக்கு விவசாயிகளின் உதவித்தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications