25 வருஷம் ஆச்சு.. மீண்டும் "இன்டர்போல்" மாநாடு.. டெல்லியில் இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
டெல்லியில் இன்று நடக்கும் இன்டர்போல் மாநாட்டில் பிரதமர் மோடி உரைநிகழ்த்துகிறார்
சென்னை: இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்பின் பொதுச்சபை கூட்டத்தை பிரதமர் மோடி இன்றுதொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.. இந்த கூட்டம் டெல்லியில் இன்று துவங்கி நடக்க உள்ளது.
சர்வதேச அளவில் போலீஸ் துறையில் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் இன்டர்போல் அமைப்பு. ஐரோப்பிய நாடான பிரான்சின் லியான் நகரை தலைமையிடமாக வைத்து செயல்படும் இந்த அமைப்பில் மொத்தம் 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அமைப்பின் பொது சபை கூட்டம்தான் இன்று நடக்க போகிறது.. டெல்லியில் இன்று அதாவது 18ம் தேதி துவங்கி, வருகிற 21ம் தேதி வரை கூட்டம் நடக்க உள்ளது.. இந்தியாவில் 25 வருடங்களுக்கு பிறகு, இந்தக் கூட்டம் நடக்க உள்ளது என்பதுதான் இதன் முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டு வருகிறது.. இதற்கு முன்பு, 1997ல் கடைசியாக இந்த கூட்டம் நடந்தது.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் இந்தக் கூட்டம் டெல்லியில் நடத்தப்பட உள்ளது... பிரகதி மைதான், ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் ஆகிய இடங்களில் இந்த கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.. இதை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 195 நாடுகளின் மத்திய போலீஸ் அமைப்பின் தலைவர்கள், அமைச்சர்கள் உட்பட கிட்டத்தட்ட 2,000 பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நம் நாட்டின் சார்பில் இந்த அமைப்பில்தான் சிபிஐ இடம்பெற்றிருக்கிறது என்பதால், இந்த இன்டர்போல் பொது சபை கூட்டத்தை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிபிஐதான் கவனித்து கொண்டு வருகிறது.. இந்த சிறப்புவாய்ந்த இன்டர் போல் பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் மத்திய போலீஸ் அமைப்பைச் சேர்ந்த குழுவினர் பங்கேற்க வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் சார்பில் உள்துறை அமைச்சர், சிபிஐ இயக்குனர் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.. 25 வருடங்களுக்கு பிறகு நடக்கும் மாநாடு என்பதாலும், 195 நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வதாலும், உலக நாடுகளின் கவனத்தையும் இந்தத மாநாடு ஈர்த்து வருகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications