"தமிழர்கள் கனவுகளை நனவாக்குகிறோம்.." மத்திய அரசு திட்டங்களை பட்டியலிட்ட பிரதமர் மோடி! எழுந்த கரகோஷம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்லாவரம் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அளித்துள்ள திட்டங்களைப் பட்டியலிட்டுப் பேசினார்.

பல்லாவரம் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். வணக்கம் தமிழ்நாடு என்று சொல்லி தனது உரையைத் தொடங்கினார் பிரதமர் மோடி.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "தமிழ்நாட்டிற்கு வருவது அருமையான அனுபவம்: இது வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் இருப்பிடம்,.. தேச பக்தி தேசிய உணர்வு ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது.. பல சுதந்திரப் போராட்ட தியாகிகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.. ஒரு கொண்டாட வேலையில் நான் இங்கு வந்துள்ளேன் என்பது எனக்கு தெரியும்.. இன்னும் சில நாட்களில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாட உள்ளோம்.

PM Modi says Tamil Nadu is the center of patriotism and nationalism

புதிய ஆற்றல், புதிய நம்பிக்கை, புதிய தொடக்கத்திற்கான நேரம் இது.. பல திட்டங்களைத் தொடங்கியுள்ளோம், வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம்.. இந்த திட்டங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு உற்சாகத்தைக் கூட்டும். கடந்த சில ஆண்டுகளில் கட்டமைப்பு துறையில் புரட்சியை செய்து வருகிறோம்.

நிதி ஒதுக்கீடு: விமானம், ரயில், சாலை எனப் பல கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கியுள்ளோம்.. பட்ஜெட்டில் கட்டமைப்பிற்கு 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது: இது 2014 ஒதுக்கீட்டை விட 5 மடங்கு அதிகம். ரயில்வே கட்டமைப்பிற்கும் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் தொகை ஒதுக்கீடு செய்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் அதிக நீளத்திற்குத் தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து வருகிறது. 2014உடன் ஒப்பிடுகையில் இது இரட்டிப்பாக்கியுள்ளது

2014க்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் 600 கிமீ ரயில் பாதை மின் மயமாக்கப்பட்டது.. இப்போது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4000 கிமீ ரயில் பாதை மின் மயமாக்கப்பட்டு வருகிறது.. 2014 வரை 74 ஏர்போர்ட்கள் மட்டுமே உருவாக்கி இருந்தார்கள்; அது இப்போது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.. 2014 உடன் ஒப்பிடுகையில் துறைமுகங்களின் திறனும் கூட இரட்டிப்பாகியுள்ளது..

PM Modi says Tamil Nadu is the center of patriotism and nationalism

மருத்துவ கல்லூரிகள்: போக்குவரத்து கட்டமைப்பு மட்டுமின்றி, டிஜிட்டல் கட்டமைப்பையும் மேம்படுத்தியுள்ளோம்.. 2014இல் இந்தியாவில் 380 மருத்துவ கல்லூரிகள் இருந்தன: இன்று 660 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.. கடந்த 9 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.. டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் உலக அளவில் நாம் தான் முதல் இடத்தில் இருக்கிறோம்..

மிகவும் மலிவான விலையில் இணைய சேவை இந்தியாவில் தான் வழங்கப்படுகிறது.. 6 லட்சம் கண்ணாடி இழை நார்கள் போடப்பட்டு, கிராம பஞ்சாயத்துகளுக்கும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது.. பணி கலாச்சாரமும் தொலைநோக்கு பார்வையும் தான் இதைச் சாத்தியமாக்கியுள்ளது.. கட்டமைப்பு திட்டம் என்றாலே தாமதம் என்ற நிலை மாறியுள்ளது..

மக்கள் வரி: வரி செலுத்துவோரின் ஒவ்வொரு ரூபாய் வரியும் முறையாகச் செலவு செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.. குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்னதாக அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, இலக்குள் எட்டப்படுகிறது.. கட்டமைப்பு என்பது வெறும் கான்கரீட் கலவை, செங்கல், சிமெண்டாக பார்க்கவில்லை.. மக்களின் கனவுகளின் நனவாக்கும் திட்டங்களாகவே கட்டமைப்பை நாங்கள் பார்க்கிறோம்.

இன்று தொடங்கப்பட்ட திட்டங்களும் மக்களின் கனவுகளை நனவாக்கும் திட்டங்கள் தான்.. சாலையில் வேகமெடுப்பது வாகனம் மட்டுமில்லை. மக்களின் கனவும் தான் வேகமெடுக்கிறது.. பொருளாதாரம் நிறையத் தொடங்குகிறது.. ஒவ்வொரு கட்டமைப்பு திட்டமும் பல கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றுகிறது.. ரயல்வே உள்கட்டமைப்பில் இதுவரை இல்லாத பெரும் தொகையாக 6000 கோடிக்கும் அதிகமான நிதியைத் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கியுள்ளோம்

நெடுஞ்சாலைகள்: 2014க்கு பிறகு தமிழ்நாட்டில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையின் தூரத்தைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது நெடுஞ்சாலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 1200 கோடியில் இருந்து பல மடங்கு அதிகரித்து 8600 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் பல முக்கிய திட்டங்கள் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளோம். இங்கே புதிதாக ஜவளி பூங்காவை அறிவித்துள்ளோம். சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே பாதை கட்டுமானம் முடியும் தறுவாயில் உள்ளது.

PM Modi says Tamil Nadu is the center of patriotism and nationalism

மாமல்லபுரம் கன்னியாகுமரி கிழக்கு கடற்கரைச் சாலையை மேம்படுத்தி வருகிறோம். இப்படிப் பல திட்டங்கள் நடந்து வருகிறது. இன்று மேலும் சில திட்டங்களைத் தொடங்கியும், அடிக்கல் நாட்டியும் உள்ளோம். தமிழ்நாட்டின் மூன்று முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று நகரங்களுக்கு இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் நேரடியாகப் பயன் பெற உள்ளது.

சென்னை ஏர்போர்ட்: சென்னை ஏர்போர்ட் புது முனையம் அதிகரிக்கும் பயணிகளைச் சமாளிக்க உதவும். இது தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழகத்தின் அம்சத்தை இது நினைவூட்டுவதாக உள்ளது.

ஏற்கனவே சென்னை பெங்களூர் இடையே வந்தே பாரத் இயங்கி வருகிறது. இந்த ரயில் குறித்த படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இணைய இப்போது மாநிலத்திற்கு இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இது முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பமாகும்.

கோவை: தொழில் நகராக இருக்கும் கோவைக்கு இந்த நவீன ரயில் சேவை பெரியளவில் உதவும். இதன் மூலம் பயண நேரம் 6 மணி நேரமாகக் குறைக்கிறது. இது சேலம், ஈரோடு, திருப்பூரிலும் பலன் தருகிறது. தமிழகத்தின் கலாசா ராக நகராக இருப்பது மதுரை. பண்டை நகரங்களில் மதுரையும் ஒன்று. இன்றைய திட்டங்கள் இந்த பண்டை நகரத்தின் நவீன கட்டமைப்புக்கு உதவும்.

தமிழ்நாடு இன்று இந்தியாவின் வளர்ச்சி என்ஜின்களில் ஒன்று. இன்றைய திட்டங்கள் தமிழக மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும். இவை வேலை வாய்ப்பை அதிகரித்து தமிழ்நாட்டை வளர்க்கிறது. தமிழ்நாடு வளரும் போது இந்தியாவும் வளர்கிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+