Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி நடுங்குகிறார்.. வங்கதேசத்தில் முஸ்லீம்கள் இப்படி பண்ணியிருக்காங்க.. விடாத சுப்பிரமணியன் சுவாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடியை தொடர்ச்சியாக விமர்சித்து வரும் சுப்பிரமணியன் சுவாமி, தற்போது வங்கதேச பிரச்சினையை மையப்படுத்தி மோடியை கடுமையாக சாடியிருக்கிறார். வங்கதேசத்தில் பெண் பிரதமரை முஸ்லீம்கள் துரத்தியடித்து இருப்பதாகவும், அதேவேளையில், மோடி நடுங்கி கொண்டு இருப்பதாகவும் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

ஜனதா கட்சியை நடத்தி வந்த சுப்பிரமணியன் சுவாமி பாஜகவில் தனது கட்சியை இணைத்தார். பாஜகவில் இணைந்த சுப்பிரமணியன் சுவாமி தனக்கு கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய பதவிகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் பாஜக மேலிடமோ சுப்பிரமணியன் சுவாமிக்கு முக்கிய பொறுப்புகள் எதையும் தற்போது வரை கொடுக்கவில்லை.

Subramanian Swamy Muslims

ராஜ்யசபா எம்பி பொறுப்பு வழங்கியதோடு சரி.. அதன்பிறகு வேறு எந்த பொறுப்பையும் அவருக்கு கொடுக்கவில்லை. இதனால் சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது பாஜகவுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தும் விதமாக பரபரப்பு கருத்துக்களை கூறி வருகிறார். மறைந்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொடங்கி சுப்பிரமணியன் சுவாமியால் சீண்டப்படாத பாஜக தலைவர்களே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

வங்கதேச பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு பங்கா? ராகுல் காந்தி கேட்ட 3 கேள்வி.. ஜெய்சங்கர் பதில் இதுதான்


அதேபோல மத்திய நிதியமைச்சர் பதவி உள்ளிட்டவைகளுக்கும் சுப்பிரமணியன் சுவாமி இலக்கு வைத்துப் பார்த்தார். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. இதனால், சமீப காலமாக பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார். லோக்சபா தேர்தலுக்கு முன்பாக மோடி மீண்டும் பிரதமராக வரக் கூடாது என பேசியிருந்தார். அண்மையில் நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டது.

அப்போது பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து சுப்பிரமணியன் சுவாமி பேசியிருந்தார். சுப்பிரமணியன் சுவாமி கூறும் போது, "பாஜகவில் இருக்கும் நாம் நமது கட்சி டைட்டானிக் கப்பல் போல மூழ்குவதைப் பார்க்க வேண்டுமானால் பிரதமர் மோடியின் தலைமைதான் சிறப்புக்குரியதாக இருக்கும். 13 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளானவை, பாஜக நிரந்தரமாக மூழ்கப் போவதற்கான முன் விரிசல்களை வெளிப்படுத்தி இருக்கிறது என விமர்சித்திருந்தார்.

இப்படி தொடர்ச்சியாக விமர்சித்து வரும் சுப்பிரமணியன் சுவாமி, தற்போது வங்கதேச விவகாரம் பற்றி எரியும் சமயத்தில் மோடியை காட்டமாக விமர்சித்து ஒரு பதிவை போட்டுள்ளார். சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: - இந்தியாவிற்கு சொந்தமாக லடாக்கில் உள்ள 4067 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்தை சீனா ஆக்கிரமித்த போது, மோடி கோழை போல இருந்தார்.

இந்தியர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு முஸ்லீம் தலைவர்கள் கூறும் போது, மோடி நிலையில்லாமல் இருந்தார். தற்போது வங்கதேச பெண் பிரதமரை முஸ்லீம்கள் துரத்தியடிக்கும் போது மோடி நடுங்கிக் கொண்டு இருக்கிறார். நேபாளம் குறித்து கேட்காதீர்கள்.. மோடியை ராஜினாமா செய்ய சொல்லுங்கள்" என்று பதிவிட்டு இருக்கிறார்.

வங்கதேசத்தில் இட ஒதுக்கீடுக்கு எதிரான போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தே தீர வேன்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடாப்பிடியாய் நின்றனர். நிலைமை கையை மீறி சென்றதால் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்த வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறினார்.

ராணுவ ஹெலிகாப்டரில் இந்தியாவுக்கு தப்பி வந்த ஷேக் ஹசீனா தற்போது டெல்லியில் தற்காலிகமாக தஞ்சம் அடைந்து இருக்கிறார். வங்க தேச விவகாரத்தில் அங்குள்ள சூழலை கண்காணித்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+