அடுத்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியா? பிரதமர் மோடி இப்படி பதில் சொல்லிவிட்டாரே!
சென்னை: தம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் எந்த ஒரு திட்டமும் இல்லை; பாஜக மேலிடம் எங்கு போட்டியிட சொன்னாலும் போட்டியிடுவேன் என தமிழ்நாட்டில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
பிரதமர் மோடி தமிழ்நாட்டின் தந்தி டிவி சேனலுக்கு சிறப்பு நேர்காணல் அளித்தார். இந்தப் பேட்டியில் தமிழ்நாட்டில் போட்டியிடுவீர்களா? என்பது குறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்கப்பட்டது.

தமிழ்நாட்டில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு பிரதமர் மோடி அளித்த பதில்: என்னுடைய வாழ்க்கையில் தேர்தல்களில் போட்டியிடுவது பற்றி நினைத்ததே இல்லை. திடீரென தேர்தலில் போட்டியிடும் நிலைமை உருவானது. நான் பாஜக எனும் ஒரு கட்சியின் சிப்பாய். அவ்வளவுதான். பாஜக என்னை எங்கு போட்டியிட சொல்கிறதோ அங்குதான் போட்டியிட முடியும். பாஜக தேர்தலில் போட்டியிட சொன்னது. போட்டியிட்டேன். ஆகையால் பாஜக கட்சி எங்கு என்னை போட்டியிடச் சொல்கிறதோ அங்குதான் நான் போட்டியிடவும் முடியும்.
என்னுடைய வாழ்க்கைப் பயணம் எந்த ஒரு திட்டத்துடனான பயணங்களைக் கொண்டதும் அல்ல. நான் வெளிப்படையாக, திறந்த மனதுடன் பயணிக்கிறேன். இப்படி இருந்தால்தான் வாழ்க்கை நம்மை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
தமிழ்நாடு என்பது இந்தியாவின் மிகப் பெரிய சக்தி. நீங்கள் ஆட்சியை யாருக்கு கொடுக்கிறீர்கள் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. நான் நாட்டின் பிரகாசமான எதிர்கால நலன் கருதி பாடுபடுகிறேன். தமிழ்நாட்டு மக்கள் யாருக்கு ஓட்டுப் போடுகிறார்கள் என்பது என் பிரச்சனை அல்ல. நான் ஒரு போதும் தமிழ்நாட்டுக்கு அரசியல் திட்டத்துக்கு வருவதும் இல்லை. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications