ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி...தமிழில் ட்வீட் செய்த மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி : தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக 20 இடங்களில் போட்டியிட்டது. இதனால் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தமிழகம் வந்தனர்

இந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக.,விற்கு 4 இடங்கள் கிடைத்துள்ளன. கடந்த 25 ஆண்டுகளாக தமிழக சட்டசபையில் பாஜக.,விற்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் இருந்த நிலையில், தற்போது 4 எம்எல்ஏ.,க்கள் கிடைத்துள்ளனர். இதனால் தமிழகத்தில் பாஜக.,வின் ஓட்டு சதவீதமும் அதிகரித்துள்ளது.

 PM Modi tweets in tamil for thanking tamilnadu people

இதற்கிடையில் 5 மாநிலங்களிலும் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கும், பாஜக வேட்பாளர்களுக்கும் பிரதமர் மோடி ட்விட்டர் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து 5 மாநில மக்களுக்கும் அந்தந்த மாநில மொழிகளில் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இதில் தமிழக மக்களுக்கு தமிழில் நன்றி தெரிவித்துள்ளார்.

அந்த பதில் அவர், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மாநில நலனுக்காகவும் பெருமைமிகு தமிழ் பண்பாட்டை மென்மேலும் பறைசாற்றவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழக மக்களுக்கு உறுதியளிக்கிறேன். கடினமாக உழைத்த நமது தொண்டர்களைப் பாராட்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 PM Modi tweets in tamil for thanking tamilnadu people

முன்னதாக அமித்ஷாவும் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து தமிழில் ட்விட் செய்திருந்தார். தமிழகத்தில் வெற்றி பெற்ற 4 பாஜக வேட்பாளர்களுக்கும் தமிழில் வாழ்த்து பதிவிட்டிருந்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+