பொங்கலுக்கு வருகிறாரா? தமிழக விவசாயிகளுடன் கொண்டாட பிரதமர் மோடி திட்டம்.. பாஜகவினர் உற்சாகம்!
சென்னை: 2026 பொங்கல் பண்டிகையை தமிழக விவசாயிகளுடன் கொண்டாட பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண நிறைவு விழாவில் பங்கேற்கும் மோடி, பொங்கல் பண்டிகையையும் கொண்டாட திட்டமிட்டிருக்கிறார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் கூட இல்லாத சூழலில், அத்தனை கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. தேசிய கட்சியான பாஜக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, இம்முறை அதிமுகவிடம் 30 தொகுதிகளுக்கும் கூடுதலாக கேட்டு வருகிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பாக சென்னை மற்றும் கோவையில் அதிக இடங்களை பாஜக கோரி இருக்கிறது. அதிமுகவின் 2ஆம் கட்டத் தலைவர்கள் வலிமையாக இருக்கும் தொகுதிகளை பாஜக டார்கெட் செய்வது பல்வேறு குழப்பத்தையும் உருவாக்கி இருக்கிறது. இந்த வாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வரவிருக்கும் நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் தேர்தல் வரை பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொடர்ச்சியாக வருவார்கள் என்று சொல்லப்பட்டு வருகிறது. பீகார் தேர்தல் முடிவடைந்த உடன் நவம்பர் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கோவைக்கு ஒருநாள் சுற்றுப்பயணமாக வந்திருந்தார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையின் போது பிரதமர் மோடி மீண்டும் வரவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2026 பொங்கல் பண்டிகையை தமிழக விவசாயிகளுடன் கொண்டாட பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தின் நிறைவு விழா ஜனவரி மாதம் முடிவடைகிறது. இந்த நிறைவு விழாவிலும் மோடி பங்கேற்க இருக்கிறார்.
அதேபோல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட வளாகத்தை பொங்கல் பண்டிகையையொட்டி திறந்து வைக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதற்கட்ட வளாகம் பொங்கல் பண்டிகையின் போது பயன்பாட்டுக்கு வரும் என்று சொல்லப்பட்டது. இதனால் ஜனவரி மாதம் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வர வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
சமாதானமாகும் அண்ணாமலை?.. பேட்மிண்டன் மைதானத்துக்கே தேடிப்போன மத்திய அமைச்சர்! பின்னணி -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications