பதற்றம்.. அவசரம்.. அச்சம்.. சந்திர பாபு நாயுடுவுக்கு போனை போட்ட மோடி.. ஆட்சி அமைக்க தீவிர வேகம்!
சென்னை; 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் என்டிஏ கூட்டணிகள் உதவியுடன் ஆட்சி அமைக்க தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதாம். இந்த நிலையில்தான் தெலுங்கு தேசம் சந்திர பாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி திடீரென போன் செய்துள்ளார்.
2024 லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.

இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 288 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பாஜக தனியாக 240 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
உதவி தேவை ; இப்போது உள்ள சூழலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பே இல்லை என்றே கருதப்படுகிறது. தனி மெஜாரிட்டி பெற பாஜகவிற்கு 40 இடங்களுக்கு மேல் இன்னும் கிடைக்க வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவாகவே கருதப்படுகிறது. பாஜகவிற்கு தனியாக மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் அவர்கள் ஆட்சி அமைப்பது கடினம். ஏனென்றால் மோடி பிரதமர் ஆவதற்கு என்டிஏ கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்காமல் போகலாம்.
உதாரணமாக நிதிஷ் குமாரின் ஜேடியூ பீகாரில் 15 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆந்திர பிரதேசத்தில் 14 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இவர்கள் என்டிஏ கூட்டணிதான்.
ஆனாலும் மோடியுடன் அத்தனை நெருக்கம் இல்லை. பாஜகவை ஆதரித்தாலும் மோடியை தனிப்பட்ட வகையில் கடுமையாக எதிர்க்க கூடியவர்கள். சந்திரபாபுநாயுடு எல்லாம் ஒரு காலத்தில் கடுமையாக மோடியை எதிர்த்தவர்.
மோடி போன் கால்: இப்படிப்பட்டவர்கள் மோடி பிரதமர் ஆக எதிர்க்கலாம். ஏன் சமயங்களில் என்டிஏ கூட்டணியை உடைத்துவிட்டு இந்தியா கூட்டணிக்கு கூட செல்லலாம். இன்னும் சொல்லப்போனால் நிதிஷ் அல்லது சந்திர பாபு நாயுடு பிரதமராக முன்னிறுத்தப்பட்டு இந்தியா கூட்டணி கூட ஆட்சி அமைக்கலாம்.
இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் என்டிஏ கூட்டணிகள் உதவியுடன் ஆட்சி அமைக்க தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதாம். இந்த நிலையில்தான் தெலுங்கு தேசம் சந்திர பாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி திடீரென போன் செய்துள்ளார்.
அவரிடம் போன் செய்து ஆட்சி அமைப்பது தொடர்பாக மோடி ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தெலுங்கு தேசம் அல்லது ஜேடியூ வெற்றியாளர்களை தீர்மானிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதை உணர்ந்தே பிரதமர் மோடி நேற்று நிதிஷ் குமாரை பிரதமர் மோடி சந்தித்தார்.
மோடி - நிதிஷ் குமார் இடையே ஆலோசனை நடந்தது. நிதிஷ் குமார் பாஜக கூட்டணிக்கு வரும் முன் இந்தியா கூட்டணியில் இருந்தவர். சமீபத்தில்தான் மீண்டும் பாஜக கூட்டணிக்கு வந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் தெலுங்கு தேசம் சந்திர பாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி திடீரென போன் செய்துள்ளார். தெலுங்கு தேசம் காங்கிரஸ் கூட்டணிக்கு செல்ல கூடாது. பாஜகவை கைவிட கூடாது என்று கோரிக்கை வைத்து இருக்கலாம் என்று சந்திரபாபு நாயுடுவிடம் மோடி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
-
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications