தமிழ்நாடு வரும் மோடி.. 2 நாள் பயணம்.. "அவரை" நேரடியாக போய் சந்திக்கிறாராமே? என்ன பிளான்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூலை 27ம் தேதி 2 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு பிரதமர் மோடி பயணம் செய்ய உள்ளார்.

இந்த பயணத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தில் அடி திருவாதிரை நிகழ்வில் பிரதமர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு சில அரசியல் மீட்டிங்குகள், கூட்டணி தொடர்பான சில ஆலோசனைகள், கூட்டணியில் மற்ற சில கட்சிகளை கொண்டு வருவது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Edappadi Palaniswami AIADMK

தமிழ்நாட்டில் நடைபயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமியை மோடி சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தேர்தல் சமயத்தில் மோடியின் இந்த வருகை பாஜகவினருக்கு ஊக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி அமித் ஷா வருகை

ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பயணத்தில் அமித் ஷா கலந்து கொள்கிறாராம். உள்துறை அமைச்சர் அமித் ஷா அடுத்த மாதம் அல்லது இந்த மாதம் இறுதியில் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பயணத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி பயணம் கவனம் பெற்றுள்ள நிலையில் கூட்டணிக்கும் இது சாதகமாக மாற தொடங்கி உள்ளது. இந்த நிலையில்தான் எடப்பாடி உடன் இந்த பயணத்தில் அமித் ஷாவும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி நடைபயணம்

இந்த பயணம் கிட்டத்தட்ட அதிமுக + பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் பயணமாக அமைந்துவிட்டது. இரண்டு கட்சிகளும் நெருக்கமாகும் அளவிற்கு பயணத்தில் பல முக்கியமான சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன. முன்னதாக பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எனது அருமை நண்பர் எடப்பாடி பழனிசாமி , மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் தொடங்கிய "புரட்சித்தமிழரின் எழுச்சிப்பயணத்தில்" மேட்டுப்பாளையத்தில் கலந்துகொண்டேன்.

பெருந்திரளாக கூடியிருந்த பொதுமக்கள் திமுக அரசுக்கு முடிவுரை எழுதத் தயாராகி விட்டார்கள் என்பதை உணர்த்துவதாக அமைந்திருந்தது. இந்த நிகழ்வில் என்னுடன்,மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தேசிய இணை பொறுப்பாளர் ரெட்டி சுதாகர்,கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ திருமதி. வானதி சீனிவாசன் ,பாஜக மாநில பொதுச்செயலாளர் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் காரியகர்த்தாக்கள் இணைந்து கலந்துகொண்டார்கள். தமிழக மக்களின் நலனுக்காக எடப்பாடி பழனிச்சாமி தொடங்கியுள்ள இந்த புரட்சிப்பயணம் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துகள், என்று கூறி உள்ளார்.

எடப்பாடி பேச்சு

இந்த பயணத்தில் எடப்பாடி பேசும் சில விஷயங்கள் சர்ச்சையாகி வருகின்றன. ஏற்கனவே அவர் கோவில் நிதி குறித்து பேசியது சர்ச்சையானது. இந்த நிலையில் நேற்று எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ஏங்க ஏழை.. எளியோர்.. கஷ்டப்பட்டு.. கடுமையாக உழைத்து.. காலையில் இருந்து மாலை வரை உழைத்த பின்.. இந்த கடையில் போய் வாங்கி குடிக்கிறார்கள். கொஞ்ச காசில் உடம்பு வலியை போக்குவதற்கு இப்படி குடிக்கிறார்கள். அதில் கூட 10 ரூபாய்க்கு கொள்ளையடிக்கிறார்கள்., என்று கூறி உள்ளார்.

மக்களின் குடி பழக்கத்தை வலிக்காக குடிக்கிறார்கள் என்று பொதுமைப்படுத்தி அவர் பேசியது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+