10 நாட்களில்.. 2வது முறையாக தமிழ்நாடு வந்தார் மோடி.. மேயர் ப்ரியா, அண்ணாமலை, வானதி வரவேற்பு
சென்னை: பாஜக கூட்டம் மற்றும் சில பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை புரிந்து உள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு மீண்டும் மீண்டும் பயணம் மேற்கொள்ள உள்ளார். பொதுவாக தேர்தல் காலங்களில் இப்படி பல்வேறு பொதுத்திட்டங்களை தொடங்கி வைக்க மோடி பயணம் மேற்கொள்வது அவசியம்.

அதேபோல் இந்த முறையும் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். பாஜக கூட்டம் மற்றும் சில பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை புரிய உள்ளார். கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாக மோடி தமிழ்நாடு வந்துள்ளார். மேயர் ப்ரியா, அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ வான திஆகியோர் மோடிக்கு வரவேற்பு கொடுத்தனர்.
பிற்பகல் 3.30 மணிக்கு கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு திட்டத்தை பார்வையிடுகிறார். ஹெலிகாப்டர் மூலமாக மாலை 5 மணிக்கு சென்னை வரும் மோடி பாஜக கூட்டத்தில் கலந்து கொள்கிறார்
மோடி கருத்து: தமிழ்நாடு பயணம் குறித்து பிரதமர் மோடி செய்த போஸ்டில், நான் நாளை, மார்ச் 4ம் தேதி சென்னையில் இருப்பேன், தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட இந்தியாவின் உள்நாட்டு முன்மாதிரி வேக ஈனுலையில் (PFBR) கோர் லோடிங் துவக்கப் பணியை பார்வையிடும் வாய்ப்பை பெறுகிறேன். மேலும் நகரில் பாஜக நடத்தும் பொதுக்கூட்டத்திலும் உரையாற்றவுள்ளேன்., என்று கூறியுள்ளார்.
பயண திட்டம்; இன்று மார்ச் 4 ஆம் தேதி, காலை 10:30 மணியளவில், தெலுங்கானாவின் அடிலாபாத்தில் 56,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுவார் என்று பிரதமர் அலுவலகம் (PMO) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் விமானம் மூலம் தமிழ்நாடு வரும் மோடி பிற்பகல் 3:30 மணியளவில், தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள அணு மின் நிலையத்திற்கு மோடி செல்கிறார். அதன்பின் விமானம் மூலம் மாலை சென்னை வரும் மோடி சாலை மார்க்கமாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திற்கு செல்கிறார்.
மோடி தமிழ்நாடு: பின்னர் அந்த மைதானத்தில் நடைபெறும் பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள அரசியல் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தை முறையாக இங்கே மோடி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கூட்டணி தலைவர்களை பாஜக மேடையில் ஏற்றும் வாய்ப்புகள் உள்ளன.
டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் உட்பட சிலர் மேடைக்கு வரும் வாய்ப்புகளும் உள்ளன. இது போக ஜிகே வாசன், ஐஜேகே பாரிவேந்தர் ஆகியோரும் இந்த நிகழ்வில் மரியாதை நிமித்தமாக கலந்து கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.
நாளை பயணம்: இன்று தமிழ்நாட்டில் பயணத்தை முடித்துவிட்டு நாளை தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டியில் 6,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு மார்ச் 5-ம் தேதி காலை 11 மணியளவில் பிரதமர் மோடி தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டுவார். பிற்பகல் 3:30 மணியளவில், ஒடிசாவின் ஜாஜ்பூரில் உள்ள சண்டிகோலேயில் 19,600 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டுவார்.
மார்ச் 6-ம் தேதி காலை 10:15 மணிக்கு கொல்கத்தாவில் ரூ.15,400 கோடி மதிப்பிலான பல இணைப்புத் திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 20 ஆயிரம் போலீசார் களமிறக்கப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications